மேலும் அறிய

”சீமான் ஒரு 'யூடியூபர்'.. 2% ஓட்டுத்தான் வாங்குவார்” சி.டி.ஆர். நிர்மல் குமார் விமர்சனம்

சீமான் ஒரு பொறுப்பான அரசியல் தலைவரைப் போலச் செயல்படாமல், வெறும் யூடியூபர் போலத் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

தேர்தல் களத்தில் சீமான் ஒரு  யூடியூபர்  போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அவருக்கு இந்த தேர்தல் 2 சதவீதம் தான் வாக்குகள் தான் கிடைக்கும் என்று  தவெக நிர்மல் குமார் விமர்சித்தார்.

சூழ்ச்சிகளை முறியடித்து போட்டி:

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எடப்பாடி தொகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கழக வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினர் எந்தவிதமான அடிப்படை முகாந்திரமும் இன்றி திட்டமிட்டு ஆட்சேபனைகளைத் தெரிவித்தனர். இத்தனை சூழ்ச்சிகளையும் சட்டரீதியாக முறியடித்து, அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை உறுதி செய்திருப்பது கழகத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆச்சரியப்படும் விதமாக, திமுக தரப்பு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தபோது, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.

காவல்துறை காட்டும் கெடுபிடிகள்

எங்கள் தலைவரின் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை முடக்க ஆளுங்கட்சி காவல்துறை மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாளை நடைபெறவிருக்கும் திருநெல்வேலி சுற்றுப்பயணத்திற்கு அனுமதி பெறுவதற்கே மிகுந்த போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. புதுக்கோட்டை மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரத்திற்கு முன்கூட்டியே அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம். ஆனால், தாங்கள் விண்ணப்பித்த உடனே, அதே தேதியில் முதலமைச்சரின் நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து அனுமதியை மறுப்பது அல்லது தேதியை மாற்றச் சொல்லி வற்புறுத்துவது போன்ற நடைமுறைகளை காவல்துறை தொடர்ந்து கையாள்கிறது. இத்தகைய தொடர் இடையூறுகளால் தலைவரின் சுற்றுப்பயணத் திட்டங்களை அடிக்கடி மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சீமானுக்கு 2% தான் கிடைக்கும்: 

நாம் தமிழர் கட்சி குறித்து பேசிய நிர்மல் குமார்,  சீமான் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் ஒரு பொறுப்பான அரசியல் தலைவரைப் போலச் செயல்படாமல், வெறும் யூடியூபர் போலத் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். கள நிலவரப்படி சீமானுக்குப் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றும், இந்தத் தேர்தலில் அவருக்கு அதிகபட்சம் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் 

தமிழக வெற்றிக் கழகம் குறித்து சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களைத் தொண்டர்களும் மக்களும் எந்தக் காரணத்திற்காகவும் நம்ப வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார். ஆளுங்கட்சியின் இத்தகைய தடைகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பணியாமல், கழகம் 234 தொகுதிகளிலும் மிகுந்த நம்பிக்கையுடனும் வலிமையுடனும் தேர்தலைச் சந்திக்கும் என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?

வீடியோ

CM விஜய்க்கு மிரட்டல் திமுக MLA அதிரடி கைது கனிமொழி கடும் கண்டனம்
குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.2500? மகளிருக்கு பட்ஜெட்டில் சர்ப்ரைஸ் CM விஜய் மெகா பிளான்
300 பேர் கூண்டோடு ராஜினாமா? CVS ஆதரவாளர்கள் திடீர் முடிவு விழுப்புரம் அதிமுகவில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
MK Stlain: தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாட்டில் சாத்தானின் ஆட்சியா? முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
DGP Anurag Dhankar :'ஒரு மாநிலத்தின் டிஜிபியே தற்கொலை’ திரிபுராவில் நடப்பது என்ன..?
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
அன்றாடம் மின்வெட்டு; 2 மடங்கு அதிகரித்த கட்டணம்; மின்சாரத் துறை குளறுபடி- கொந்தளித்த டிடிவி!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
EV கார் வாங்கற ஐடியா இருக்கா? 500 கி.மீ.+ ரேஞ்ச்- வெளியாகும் 3 SUV கார்கள்- விவரம்!
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Embed widget