TN Urban Local Body Election 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்..கரூர் மாநகராட்சியில் அதிக வாக்குப்பதிவு
மாநகராட்சிகளில் குறைந்த அளவாக சென்னையில் 31.89%, மாநகராட்சிகளில் அதிக அளவாக கரூர் மாநகராட்சியில் 60.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 47.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநகராட்சிகளில் 39.13%, நகராட்சிகளில் 53.49%, பேரூராட்சிகளில் 61.38% வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் அதிகளவாக தருமபுரியில் 65.68%, குறைந்தளவாக சென்னை 31.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சிகளில் குறைந்த அளவாக சென்னையில் 31.89%, மாநகராட்சிகளில் அதிக அளவாக கரூர் மாநகராட்சியில் 60.28% வாக்குகள் பதிவாகியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி வாக்குப்பதிவு சதவீதம் - 3 மணி நிலவரம்
மாவட்டத்தின் பெயர் - மாநகராட்சியின் பெயர் - வாக்குப்பதிவு சதவீதம்
1. செங்கல்பட்டு - தாம்பரம் - 32.80%
2. சென்னை - சென்னை - 31.89%
3. கோவை - கோவை - 40.39%
4. கடலூர் - கடலூர் - 49.25 %
5. திண்டுக்கல் - திண்டுக்கல் - 49.02%
6. ஈரோடு - ஈரோடு - 46.14%
7. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் - 49.40%
8. கன்னியாகுமரி - நாகர்கோவில் - 42.47%
9. கரூர் - கரூர் - 60.28%
10. கிருஷ்ணகிரி - ஒசூர் - 47.31%
11. மதுரை - மதுரை - 39.52%
12. சேலம் - சேலம் - 49.80%
13. தஞ்சாவூர் - தஞ்சாவூர் மற்றும் - 48.41%
14. தஞ்சாவூர் - கும்பகோணம்
15. தூத்துக்குடி - தூத்துக்குடி - 44.21%
16. திருச்சி - திருச்சி - 57.03%
17. நெல்லை - நெல்லை - 41.35%
18. திருப்பூர் - திருப்பூர் - 39.34%
19. திருவள்ளூர் - ஆவடி - 40.79%
20. வேலூர் - வேலூர் - 45.65%
21. விருதுநகர் - சிவகாசி - 56.31%
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்