மேலும் அறிய

"மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி " - வாணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்

மொழி, உரிமை, இன உரிமை மாநில உரிமையை மீட்டெடுக்க திராவிட மாடல் 2.Oவால் மட்டுமே முடியும் - உதயநிதி ஸ்டாலின்

இன உரிமை, மாநில உரிமை, மொழி உரிமையை மீட்டெடுக்க திராவிட மாடல் 2.Oவால் மட்டும் முடியும், பொதுவாழ்க்கைக்கு வந்து என்னுடைய முதல் கைது சிஏஏ சட்டத்தை கிழித்தது தான், முரட்டு பக்தனை கேள்விபட்டுள்ளோம், மோடிக்கு முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என வாணியம்பாடியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

சிறுபான்மை மக்களுக்கு காவலராக இருப்பது திமுக

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சையத் பாருக்கை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், “நானும் ஒரு வேட்பாளர், தொகுதிக்கு போய் வாக்கு கேட்கவில்லை, கூட்டணி கட்சியான  ஏணிக்கு வாக்கு கேட்கிறேன். கடந்த ஆண்டுகளில் இந்த தொகுதிகளில், வெற்றியை இழந்தோம். இந்த முறை தவறு நடக்கக்கூடாது. பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம். உரிமையாக சென்று வாக்கு கேளுங்கள். சிறுபான்மை மக்களுக்கு காவலராக இருப்பது திமுக. அதிமுக, பாஜகவுடன் சேர்ந்து துரோகம் செய்கிறது. சிஏஏ சட்டம் கொண்டு வந்து அதனை ஆதரித்தது, அதிமுக.

என்னுடைய  முதல் கைது சிஏஏ சட்டத்தை கிழித்துதான்

பொதுவாழ்க்கையில் நான் வந்த போது,  என்னுடைய  முதல் கைது சிஏஏ சட்டத்தை கிழித்துதான். சிறுபான்மை மக்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, நாம் கொடுத்துள்ளோம், கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி மிக முக்கியம், 23 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றியதை சொல்லி வாக்கு கேளுங்கள். மொழி, உரிமை, இன உரிமை மாநில உரிமையை மீட்டெடுக்க திராவிட மாடல் 2.Oவால் மட்டுமே முடியும்,

 அமித்ஷாவும், மோடியும், அடிமை கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர். முரட்டு பக்தன் கேள்விபட்டுள்ளோம், மோடிக்கு முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி” எனப் பேசினார். மேலும் இந்த பிரச்சார கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget