மேலும் அறிய

Tn Election 2026 : பெரம்பூரில் வெற்றி பெறப்போவது யார் ? வரலாறு சொல்வது என்ன ?

கருத்துக்கணிப்புகளுக்குப் பிறகு, பெரம்பூர் தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றும் என்று தெரியவந்திருக்கிறது. 2வது இடத்துக்கு விஜய்யும், 3வது இடத்துக்கு பாமக வேட்பாளர் திலகபாமாவும் செல்கிறார்கள்.

சென்னை perambur constituency : தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வெப்பம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான பெரம்பூர் தொகுதி மீண்டும் ஒருமுறை அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படும் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

பெரம்பூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,07,995 பேரும், பெண் வாக்காளர்கள் 1,14,726 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 71 பேரும் என மொத்தம் 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பூர் தொகுதியில் பட்டியலின சமுதாயத்தினர் 25% பேரும், வன்னியர் சமுதாயத்தினர் 20% பேரும், முஸ்லீம்கள் 10% பேரும், கிறிஸ்தவர்கள் 7%  முதலியார் 7% பேரும்,நாடார் சமுதாயத்தினர் 10 சதவீதம், மார்வாடி 5%, யாதவ் 4%  மீதம் 12 % பேர் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.  பெரம்பூர் ஒரு தொழிலாளர் வர்க்கம் அதிகம் வசிக்கும்  தொகுதியாகும். இதில் கணிசமான அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் கலந்து வாழ்கின்றனர்.

இவர்களது வாக்குகள் திமுகவுக்கான பாரம்பரிய வாக்குகள் என்பதை கடந்த 60 ஆண்டு கால பெரம்பூர் தொகுதி தேர்தல் வரலாறு நிரூபித்து வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் 45 ஆண்டுகளில் திமுக எம்எல்ஏக்களையே பெரம்பூர் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

ஆண்டு/ வேட்பாளர் பெயர்/கட்சி/ நிலவரம்/ பெற்ற வாக்குகள்

1967 /சத்தியவாணி முத்து / திமுக வெற்றி / 54.19%

1971 /சத்தியவாணி முத்து / திமுக   வெற்றி/ 56.37%

1977 / சு.பாலன்/திமுக வெற்றி / 42.74%

1980 / சு. பாலன்/திமுக வெற்றி /54.59%

1984/  பரிதி இளம் வழுதி/ திமுக வெற்றி / 53.04%

1989/ பரிதி இளம் வழுதி/ திமுக வெற்றி /53.86 %

1991-  டாக்டர் மே. பா. சேகர்/ அதிமுக வெற்றி / 54.06%

1996- செங்கை சிவம் /திமுக வெற்றி /67.29%

2001 / கே. மகேந்திரன்/ மா.கம்யூனிஸ்ட் வெற்றி-5242%
 
2006 / கே. மகேந்திரன்/ மா.கம்யூனிஸ்ட் வெற்றி / 44.83%

2011/ அ.சவுந்தரராஜன்/ மா.கம்யூனிஸ்ட் வெற்றி / 52.26%

2016/ வெற்றிவேல்/அதிமுக வெற்றி/ 42.39%

2019/ ஆர்.டி.சேகர்/ திமுக  வெற்றி/ 56.32%

2021 / ஆர்.டி.சேகர் திமுக  வெற்றி / 52.93%
 
 அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றார்.  பெரம்பூர் தொகுதியில் திமுக வேரூன்றி இருப்பதற்கு அந்த இடைத்தேர்தலே சாட்சி. இந்நிலையில், 2026 பெரம்பூர் தொகுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளராக  3 வது முறையாக ஆர்டி சேகர் போட்டியிடுகிறார்.  என்டிஏ கூட்டணியில் பாமக சார்பில் திலகபாமாவும், தவெக சார்பில் சி.ஜோசப் விஜய், நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பல்வேறு கருத்துக்கணிப்புகளுக்குப் பிறகு, பெரம்பூர் தொகுதியை மீண்டும் திமுகவே கைப்பற்றும் என்று தெரியவந்திருக்கிறது. இரண்டாவது இடத்துக்கு ஜோசப் விஜய்யும் மூன்றாவது இடத்துக்கு பாமக வேட்பாளர் திலகபாமாவும் செல்கிறார்கள். அதிமுக ஒத்துழைக்காததால், பெரம்பூரில் பாமக வேட்பாளர் திலகபாமா தடுமாறிக் கொண்டிருக்கிறது. வன்னியர் வாக்குகளை மட்டுமே நம்பியிக்கிறார்கள். ஆனால் பெரம்பூர் வளர்ச்சிக்காகக் கடந்த காலங்களில் திமுக செய்த அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளே இதற்குக் காரணம். திமுக எம்எல்ஏவாக ஆர்.டி.சேகர் ஆற்றிய பணி தொகுதி மக்களால் நினைவுகூரப்படுவதைக் காண முடிகிறது.

பெண்களுக்கான முதலமைச்சரின் திட்டங்கள், இந்தத் தொகுதியில் உள்ள 1,14,726 பெண் வாக்காளர்களை நேரடியாகச் சென்றடைந்திருக்கிறது. அவர்களும் தங்கள் வாக்குகள் திமுகவுக்கே என்றே உறுதி செய்திருக்கிறார்கள். இதுதவிர, பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், தொகுதிக்கு செய்தவற்றையும் மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கணேசபுரம் மேம்பாலம் இன்றைக்குப் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. .பெரம்பூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் முல்லை நகர் பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பெரம்பூர் பணிமனையை மையமாகக் கொண்டு மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகரின் முயற்சியால் சென்னை, கொடுங்கையூர் குப்பை மேட்டுப் பகுதியில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கான தனித்தனி இடுகாடுகள் அமைக்கும் திட்டம் சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 9 ஏக்கர் நிலம் தலா 3 ஏக்கர் வீதம் மூன்று மதத்தினருக்கும் (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்) தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, மயான பூமிகள் அமைக்கப்படுகின்றன. சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள எழில் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், ரூ.105 கோடி மதிப்பில் கட்டப்பட்டு, பிப்ரவரி 2026-ல் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

 சென்ட்ரல் அவென்யூ மற்றும் சர்மா நகரில் உள்ளரங்க விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரம்பூர்  பகுதியில் (ஜவஹர் நகர், பெரம்பூர் பாராக்ஸ்) பல தரமான விளையாட்டு மைதானங்கள், புல்வெளித் திடல்கள் (Turfs) மற்றும் நவீன உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  பெரம்பூரிலிருந்து ஓட்டேரி, புரசைவாக்கம், எழும்பூர், சென்ட்ரல் பகுதிகளுக்குச் செல்லும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, பெரம்பூர் உயர்மட்டச் சாலையில் பெரம்பூர் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் பகுதியில் கூடுதல் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்திற்கு கிழக்கே உள்ள அம்பேத்கர் கல்லூரி சாலையில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
 
 இவற்றையெல்லாம் தொகுதிக்கு செய்த கடமையாக அடுக்குகிறா,ர் தற்போதைய திமுக எம்எல்ஏவான ஆர்.டி.சேகர். சிறுபான்மை மக்கள் என்றுமே திமுகவுக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலிலும் அவர்கள் ஆதரவுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ஆர்.டி.சேகர். தவெக சார்பில் போட்டியிடும் ஜோசப் விஜய்க்கு நடிகர் என்ற அடையாளம் ஆரம்பத்தில் பரபரப்பாகப் பேச வைத்தது. ஆனால், தொடர் அரசியல் நிகழ்வுகள் அவரது ரசிகர்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. பெரம்பூரில் விஜய் வெற்றி பெறுவது போன்ற தோற்றத்தைத் திட்டமிட்டே உருவாக்குகிறார்கள். அவர் தோல்வியடையப் போவது உறுதி...அதுவும் மூ்றாவது அல்லது நான்காவது இடத்துக்குத் தள்ளப்படுவார் என்று அடித்துச் சொல்கிறார்கள் பெரம்பூர் மக்கள்.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்...

  • சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களைப் பிரிக்க பாஜக இறக்கிய ஆளாக  ஜோசப் விஜய் இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
  • மனைவி விவகாரத்து வழக்கை தொடர்ந்ததும் நடிகையுடன் பொது வெளிக்கு வந்தது விஜய்யின் ரசிகர்களையே கொதிப்படைய வைத்திருக்கிறது
  • கரூரில் 41 பேர் இறந்தது விஜய் காலதாமதமாக வந்ததால் தான் என்பதை பெரம்பூர் மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார். விஜய் பெரம்பூர் வந்த இரு முறையும் மக்கள் ஒருவித அச்சத்துடனேயே இருந்தார்கள்.
  • மக்களை சந்திக்காமல் தவிர்க்கும் ஒருவர்,  எம்எல்ஏ ஆனால் அவரை எப்படிச் சந்திப்பது?’’ என்ற கேள்வியே பலரிடமிருந்து வருகிறது.
  • பெரம்பூரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் தான் திருச்சி கிழக்குத் தொகுதியிலும் விஜய் நிற்கிறார் என்ற எண்ணம் தொகுதி மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. 
  • அதேசமயம்,திமுகவுடனான பெரம்பூர் மக்களின் உறவு உணர்வுப்பூர்வமானது என்பதை அவர்களிடம் பேசும்போது நம்மால் உணர முடிகிறது.
  • தற்போதைய திமுக எம்எல்ஏ ஆர்.டி.சேகர் பெரம்பூர் தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்தவர்.
  • 2006 முதல் 2011 வரை சென்னை மாநகராட்சியில் 2வது வார்டு உறுப்பினராக ஆர்.டி.சேகர் இருந்தார். 2008ல் பகுதிச் செயலாளர் பதவி வகித்து வந்தார்.
  •  2011 முதல் 2014 வரை வடசென்னை திமுக மாவட்டச் செயலாளர் பதவி வகித்தார். 2015ல் திமுக இளைஞரணியில் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. 
  • இப்படி கட்சிப் பணியிலும் மக்கள் பணியிலும் பெரம்பூரில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் ஆர்.டி.சேகர். அதனால் தான் மக்கள் அவரை இரு முறை வெற்றி பெறச் செய்தார்கள்.
  • மூன்றாவது முறையாக வரும் தேர்தலிலும் வெற்றி பெற வைக்கத் தயாராகி விட்டது பல்வேறு கருத்துக்கணிப்புகளில் தெரிகிறது.
  •  பெரம்பூரில் தொழிலாளர் வர்க்கம் ஆர்.டி.சேகருக்கு பக்கபலமாக இருக்கிறது.
  • . 2021 தேர்தலில் 1,05,267 வாக்குகளைப் பெற்று, 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர்  வெற்றி   பெற்றார்.
  •  ஆர்.டி.சேகரின் இந்த வலுவான உள்ளூர் அரசியல் கட்டமைப்பை உடைப்பது மற்ற வேட்பாளர்களுக்குச் சவாலாக இருக்கும்.
  • நம் எம்எல்ஏவை எளிதாக பார்க்க முடியும், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார் என்ற நம்பிக்கையில் தான் கடந்த தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள் பெரம்பூர் மக்கள்.
  • மக்கள் நம்பிக்கையை ஆர்.டி.சேகர் காப்பாற்றினார். மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற ஆர்.டி.சேகரின் நம்பிக்கையை பெரம்பூர் மக்கள் காப்பாற்றத் தயாராகி விட்டனர்.
  • அதைத்தான் பெரம்பூர் தொகுதியின்  தற்போதைய கள நிலவரம் காட்டுகிறது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Best Hybrid Cars: ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Embed widget