அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி! சேலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம்...உதயநிதி சூளுரை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டுச் செயல்படுகிறார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இது மீண்டும் "திமுகவின் கோட்டை" என்பதை நிரூபிக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீரபாண்டியில் பேசியுள்ளார்.
11/11 வெற்றி வேண்டும்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இது மீண்டும் "திமுகவின் கோட்டை" என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது. மக்களின் எழுச்சியும் உற்சாகமும் உதயசூரியனின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது. சேலத்து மண் சுயமரியாதை மிக்க மண்; இங்கு அடிமைகளுக்கு எப்போதும் இடமில்லை.
வீரபாண்டி தொகுதியும் தருணின் அனுபவமும்
கடந்த முறை சில காரணங்களால் வெற்றி வாய்ப்பு கைநழுவினாலும், இந்த முறை வீரபாண்டியார் குடும்பத்தைச் சேர்ந்த தருண் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அரசியலிலும் நிர்வாகத்திலும் போதிய அனுபவம் பெற்றவர் அவர். கடந்த தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும், திராவிட மாடல் அரசு வீரபாண்டி தொகுதிக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
திராவிட மாடல் அரசின் சாதனைகள்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலனுக்காகப் பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது:.மகளிருக்கு கட்டணம் இல்லா பேருந்து திட்டம், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், ஒரு கோடி 31 லட்சம் மகளிர்க்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வங்கியில் மினிமம் வங்கி இருப்பு தொகை இல்லை என்று மோடி அரசு எடுத்து விடுவார்கள் என்று பணம் வந்த உடனே சென்று எடுத்து விட்டீர்கள் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் அனைவருக்கும் இல்லத்தரசிகள் திட்டத்தின் மூலமாக 8000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும்
மத்திய அரசின் பாரபட்சமும் முதல்வரின் போராட்டமும்
மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டைச் சரியாக வழங்குவதில்லை. மேலும், தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவைத் தடுத்து நிறுத்தியதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பங்கு மிக முக்கியமானது.
அடிமை அரசியலுக்கு முற்றுப்புள்ளி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டுச் செயல்படுகிறார். அன்று காலில் விழுந்து பதவி பெற்றவர்கள் இன்று தரமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தமிழகத்தில் மீண்டும் இந்த அடிமைக்கூட்டம் காலூன்ற விடாமல் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
எல்லா வாக்கும் முக்கியம்
எனது சொந்தத் தொகுதியில் கூட ஒரு நாள் மட்டுமே வாக்கு சேகரித்து விட்டு, வீரபாண்டி தொகுதியின் வெற்றிக்காக இங்கு வந்துள்ளேன். எனது வெற்றியை விட இந்தத் தொகுதியின் வெற்றி எனக்கு மிக முக்கியம். உங்களின் ஒவ்வொரு வாக்கும் பல மடங்காகப் பெருகி, வரும் ஜூன் 4-ஆம் தேதி உதயசூரியன் சின்னம் மகத்தான வெற்றி பெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்



















