மேலும் அறிய

MK Stalin Vs EPS: “அவர் பழனிசாமி இல்ல, அடிமைசாமி, ஆமாம்சாமி“; இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

புதுக்கோட்டையில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அடிமைசாமி என்று கூறி கடுமையாக விமர்சித்து பேசினார்.

புதுக்கோட்டையில் திமுக பரப்புரை பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசினார். அவரது உரையில், இபிஎஸ் குறித்து அவர் பேசியதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

“நான் இன்னும் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு வழங்குவேன்“

இந்த கூட்டத்தில், புதுக்கோட்டைக்குட்பட்ட தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை விரிவாத எடுத்துக் கூறினார்.

அப்போது, கொரோனாவில் நான் போயிருக்க(இறந்திருக்க) வேண்டும் என்று வன்மத்தோடு எடப்பாடி பழனிசாமி பேசியதாக குறிப்பிட்ட அவர், ஆனால், நான் இருந்து ஏராளமான இன்னும் ஏராளமான திட்டங்களை மக்களுக்கு செய்யத்தான் போகிறேன், அதை நீங்கள்(மக்கள்) பார்க்கத் தான் போகிறீர்கள் என்று தெரிவித்தார்.

“பழனிசாமி தரமற்றவர் என நிரூபித்து வருகிறார்“

மேலும், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட மு.க. ஸ்டாலின், பாஜகவின் கிளைக் கழக செயலராக இருக்கும் பழனிசாமியால் இப்படி ஏதாவது சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியுமா என கேள்வி எழுப்பினார். அதோடு, எங்கேயாவது அவர் சாதனைகளை சொல்லியோ, கொள்கைகளை பற்றி பேசியோ பார்த்திருக்கிறீர்களா என மக்களை பார்த்து கேள்வி எழுப்பிய அவர், மாநில உரிமைகளுக்காக பழனிசாமி குரல் கொடுத்ததை பார்த்திருக்கிறீர்களா என்றும் கேட்டு, நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று சொன்ன அவர், ஏனென்றால், பாதம்தாங்கி பழனிசாமியிடம் கொள்கைகளும் இல்லை, சாதனைகளும் இல்லை என்று கூறினார். அதனால் தான், அவர் அவதூறுகளை பேசி, தரமற்றவர் என நிரூபித்த வருவதாக விமர்சித்தார்.

“அவர் பழனிசாமி இல்லை, ஆமாம்சாமி, அடிமைசாமி“

NDA என்ற பேரிடரை தமிழ்நாட்டிற்குள் பின்வாசல் வழியாக கொண்டுவருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை அடிமைதான் பழனிசாமி என கூறிய ஸ்டாலின், அவர் பழனிசாமி இல்லை, ஆமாம்சாமி, அடிமைசாமி என கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்யும் என்டிஏ கூட்டணியில் அடிமைசாசனம் எழுதிக் கொடுத்து சேர்ந்திருப்பதாக விளாசிய அவர், அந்த கூட்டணி டெல்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி என்று கூறினார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று நேற்று பேசியதற்கு, அடிமைசாமியான பழனிசாமி ஏதாவது பதில் கூறினாரா என கேள்வி எழுப்பிய அவர், இங்கு வந்து பேசும் மத்திய அமைச்சர்கள் பலரும், இந்தி திணிப்பிற்கு ஆதரவாக மும்மொழிக் கொள்கையை நிச்சயம் செயல்படுத்துவோம் என்று பேசி வருவதற்கும், அடிமைசாமி குரல் கொடுத்திருக்கிறாரா என்றும் கேட்டார்.

அடுத்தடுத்த துரோகங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்தான் என்டிஏ கூட்டணி என்று விமர்சித்த மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், அமித் ஷா மற்றும் மோடியை ஒரே மேடையில் வைத்துக்கொண்டு, இது தமிழ்நாடு, இங்கு இருமொழிக் கொள்கைதான் என்று பழனிசாமியால் பேச முடியாமா என்றும் கேட்டு, ஒரு அடிமையால் ஓனரை எதிர்த்து பேச முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.

நீட் தீர்மானத்தை மத்திய அரசு தான் நிறுத்தி வைத்திருப்பதாக அனைவரும் நினைத்திருந்தோம், ஆனால், அதை அவர்கள் திருப்பி அனுப்பியதையே, 2 வருடங்களாக மறைத்து வைத்திருந்தவர் தான் பழனிசாமி என்றும் குற்றம்சாட்டினார் ஸ்டாலின். இப்போது, நீட் தேர்வை ரத்து செய்யுமாறு மோடியிடம் அவரால் கேட்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, துரோகங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் அளவிற்கு துரோகங்களை செய்துவிட்டு, வாய்கூசாமல் தற்போது பேசி வருகிறீர்களே என்றும் எடப்பாடி பழனிசாமிக்கே ஒரு கேள்வியை முன் வைத்தார் முதலமைச்சர மு.க. ஸ்டாலின்.

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget