மேலும் அறிய

TVK Vijay: பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய்க்கு சவாலளிக்கும் வகையில் அவரது பெயரில் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இரு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் அவர் பெரம்பூர் தொகுதியிலும், தொடர்ந்து ஏப்ரல் இரண்டாம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியிலும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை ஒரே கட்டமாக தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

ஜோசப் விஜய் பெயரில் இத்தனை வேட்பாளர்களா?

பொதுவாக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தங்களுக்கு சவாலாக திகழ்வார்கள் என்றால் பிற கட்சிகள் எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயரில் சுயேட்சை வேட்பாளர்களை களம் இறக்குவது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி எம்.ஜோசப், எஸ்.ஜோசப், கே.விஜய், ஜி.விஜய் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் தொகுதியில் மட்டும் 66 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். சென்னையில் பெரம்பூர் தொகுதியில் தான் அதிக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.  அதே சமயம் திருச்சி கிழக்கு தொகுதியில் கே.விஜய் என்ற சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

இதேபோல் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் பெயரின் பல்வேறு சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் ஆர்.எஸ்.முருகன் பெயரில் பி.முருகன், எஸ் முருகன் பெயரில் இரண்டு பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். எனினும் வேட்புமனு பரிசீலனையில் சிலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது ஒரே பெயரில் எத்தனை பெயர் போட்டி என்பது தெரிய வரும். 

தலைப்பு செய்திகள்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு... 26,921 வாக்காளர்கள், 1,330 பேர் பாதுகாப்பு!
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget