மேலும் அறிய

Annamalai: வாயைத் திறந்தாலே பொய்.. ஆதவ் அர்ஜூனாவை வச்சு செய்த அண்ணாமலை!

நமக்கு மக்களுக்கு பணி செய்யக்கூடியவர் தான் வேண்டும். உங்கள் வாக்கு மாற்றத்திற்கானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் சிதறாமல் இரட்டை இலைக்கு விழ வேண்டும் என அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வில்லிவாக்கத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.  அப்போது, “நமது வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் 2014ம் ஆண்டு இதே பகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த தயாநிதி மாறனை தோற்கடித்தவர். ஏழைகளுக்கெல்லாம் குரல் கொடுப்பவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருகின்ற ஒரு மனிதர். கடந்த முறை வில்லிவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகன் இருந்தார். யாராவது அவரை தேர்தலுக்கு பிறகு பார்த்தோம் என்றால் இல்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றியழகனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திக் மோகனை கொண்டு வந்து இங்கு நிறுத்தியுள்ளார்கள். அவர் வில்லிவாக்கத்திற்கு எதுவும் செய்யப்போவதில்லை. தேர்தல் முடிந்த பிறகு அவர் அண்ணா நகருக்கு சென்று விடுவார். அதனால் உங்கள் வாக்குகளை இரட்டை இலைக்கு போட வேண்டும். 

அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆதவ் அர்ஜூனா நிற்கிறார். அவர் காலை முதல் இரவு வரை பொய்யை மட்டுமே பேசுபவர். அவரை நிராகரிக்க வேண்டும். நமக்கு மக்களுக்கு பணி செய்யக்கூடியவர் தான் வேண்டும். அடுத்த மழைக்கு சென்னை தாங்காது என்பது நமக்கு தெரியும். கடந்த முறை மழை சரியாக பெய்யாததால் நாம் தப்பித்தோம். ஆனால் பணிகள் மேற்கொள்ள மட்டுமே ரூ.1000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படுகிறது. 

மே 4ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார். மத்தியில் பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கிறார். சென்னைக்கு பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மற்ற நகரங்களுக்கு இல்லாத வகையில் சென்னைக்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னையாக மாற்றுவேன் என சொன்னார்கள். எதுவும் செய்யவில்லை. உங்கள் வாக்கு மாற்றத்திற்கானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் சிதறாமல் இரட்டை இலைக்கு விழ வேண்டும்.

தலைப்பு செய்திகள்

Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Embed widget