மேலும் அறிய

TVK Vijay: விஜய்க்கு ஆதரவாக ஒரே ஒரு தொகுதியில் ராமராஜன் பிரச்சாரம்.. என்ன காரணம் தெரியுமா?

ராமராஜன் 2026 சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து நடிகரும், அதிமுக பிரமுகருமான ராமராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். 

மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு பரப்புரை

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை அனைவரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே செயல்பட்டு வரும் நடிகர் ராமராஜன், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் எம்.பியாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

தொடர்ந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் ராமராஜன் 2026 சட்டமன்ற தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியையும், தன் சொந்த ஊரான மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சௌ வேட்பாளர் முருகன் என்பவரையும் ஆதரித்து பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. 

ஆனால் என் திரையுலக வாழ்வை தொடங்க காரணமான ஆரம்பகால தியேட்டர் முதலாளி மறைந்த அம்பலகாரர் ஐயாவின் மகன் முருகன், 35 ஆண்டுகளுக்கு மேலாக என் நெருங்கிய நட்பில் உள்ள அன்பு உறவு காரணமாக விபின் சக்கரவர்த்திக்கும் பரப்புரை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். 

பின்னணியில் இருக்கும் காரணம்

இந்த நிலையில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து ராமராஜன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, “ஆலங்குளம் தொகுதியில் விபின் சக்கரவர்த்திக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். அவருடைய குடும்பம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக உறவில் இருந்து வருகிறது. நான் நடித்த சாமானியன் படம் சரியாக செல்லவில்லை. ரிலீஸ் செய்வதற்குள் ஏகப்பட்ட பிரச்னை வந்தது. ஆனால் ஆலங்குளத்தில் உள்ள டிபிவி மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு வெளியான  20வது நாளில் வந்தேன்.

அப்போது விபின் சக்கரவர்த்தியிடம் தியேட்டர் கட்டணத்தை குறைத்தால் நிறைய மக்கள் வருவார்கள் என சொன்னேன். உடனே டிக்கெட் கட்டணத்தை ரூ.50 ஆக மாற்றினார்கள். படம் அருமையான கதை கொண்டது என்பதால் இந்த தொகுதி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என காரணம் கூறினார். 

படம் 50 நாள் ஓடினால் நான் ஆலங்குளம் பகுதி மக்களை சந்தித்து நன்றி சொல்கிறேன் என உறுதியளித்தேன். 116 நாட்கள் அந்த படம் ஓடியது. அதேசமயம் 1985ம் ஆண்டில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். நான் பிரச்சாரம் செய்யாத ஊரில்லை. அந்த வகையில் 1991ல் ஏற்பட்ட பழக்கத்தால் நான் ஒரு உறுதியளித்தேன். 

அதன்படி விபின் சக்கரவர்த்திக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். சாமானியன் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் யாரும் என்னை எப்படி இருக்கிறீர்கள் என கேட்கவில்லை. இந்த காலத்தை என்னைப் பார்த்துக் கொண்டது விபின் சக்கரவர்த்தி குடும்பம் தான். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்” என ராமராஜன் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget