மேலும் அறிய

ஆவேசமாக பேசிய ராகுல்காந்தி! தப்புத்தப்பா மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை - கலாய்க்கும் நெட்டிசன்கள்

ராணிப்பேட்டையில் ராகுல்காந்தி பேசியதை தவறுதலாக மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகையை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஒவ்வொரு கட்சியினரும் இந்தியாவில் மிகவும் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ளது காங்கிரஸ்.

ராகுல்காந்தி பேசியதும், செல்வப்பெருந்தகை கூறியதும்:

திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக நேற்று ராணிப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பொதுமக்கள் மத்தியில் ஆங்கிலத்தில் பேசியதை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மொழிபெயர்த்து பேசினார்.

ஆனால், ராகுல்காந்தி பேசியதற்கும் செல்வப்பெருந்தகை தமிழில் மொழி பெயர்த்து பேசியதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ராகுல்காந்தி சொன்னது என்ன? அதன் அர்த்தம் என்ன? செல்வப்பெருந்தகை கூறியது என்ன? என்பதை கீழே காணலாம்.

Rahul Gandhi: We are going to defeat the vision of BJP.

அர்த்தம்: பாஜக-வின் நோக்கத்தை நாம் வீழ்த்த வேண்டும்.

செல்வப் பெருந்தகை மொழிபெயர்ப்பு: அவர்கள் இந்தியாவை பிளவுபடுத்த பார்க்கிறார்கள்.

Rahul: Yesterday PM Modi face completely Lacking Confidence.

அர்த்தம்: பிரதமர் மோடியின் முகத்தில் நேற்று நம்பிக்கை சுத்தமாக இல்லை.

செல்வப் பெருந்தகை: நேற்று முழுமையாக நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

Rahul: Modi is controlled by United States.

அர்த்தம்: பிரதமர் மோடியை அமெரிக்கா கட்டுப்படுத்துகிறது.

செல்வப் பெருந்தகை மொழிபெயர்ப்பு: காரணம் என்னவென்றால் நாம் எல்லாம் ஒருங்கிணைந்த இந்தியாவாக பார்க்கிறோம்.

Rahul: He signed a deal between India & US that sold our contry out.

அர்த்தம்: இந்தியாவை விற்பதற்கான அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

செல்வ பெருந்தகை மொழிபெயர்ப்பு: அவர்கள் நினைக்கிறார்கள் இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று.

Rahul: He handed out our energy security.

அர்த்தம்: அவர் நமது எரிசக்தி பாதுகாப்பைத் தாரை வார்த்தார்.

செல்வப் பெருந்தகை மொழிபெயர்ப்பு: நாம் வலிமையாக இருக்கிறோம்

Rahul: He gave way our Data.

அர்த்தம்: அவர் நமது விவரங்களை விட்டுக்கொடுத்துவிட்டார்.

செல்வ பெருந்தகை: அவர்களிடம் திட்டங்களும் தரவுகளும் இருக்கின்றன

Rahul: he sold our farmers

அர்த்தம்: அவர் நமது விவசாயிகளை விற்றுவிட்டார்.

செல்வப்பெருந்தகை: எல்லாவற்றையும் விற்றுவிட்டார்கள்.

Rahul: He sold our small & medium industries

அர்த்தம்: நமது சிறு, குறு தொழிற்நிறுவனங்களை அவர் விற்றுவிட்டார்.

செல்வப் பெருந்தகை: எல்லா இருப்புகளையும் பெற்று தீர்த்து விட்டார்கள்.

Rahul: Today of Trump says Modi to Jump Modi Jump.

அர்த்தம்: இன்று டொனால்ட் ட்ரம்ப் மோடியை ஆட்டுவிக்கிறார். மோடியும் அதற்கேற்றாற்போல செயல்படுகிறார்.

செல்வப் பெருந்தகை: மோடி எகிறுகிறார். விவசாயிகளின் பொருளாதாரம் அனைத்தையும் விற்றுவிட்டார்.

Rahul: If Trump says modi to lie down modi Lie down.

செல்வப் பெருந்தகை: மோதி அவர்கள் கீழே விழுந்து இருக்கிறார். கீழே விழுந்து விழுந்து இந்தியாவிற்கு எதிரான வேலைகளை பார்க்கிறார்.

Rahul: why Donald Trump control Modi Fully?

அர்த்தம்: ஏன் டொனால்ட் ட்ரம்ப் மோடியை முழுமையாக கட்டுப்படுத்துகிறார்?

செல்வ பெருந்தகை: எதற்காக அவர் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்.

Rahul: how does he control him? he control him through the epstein files

அர்த்தம்: ட்ரம்ப் அவரை எப்படி கட்டுப்படுத்துகிறார் என்றால் எப்ஸ்டீன் பைல்ஸ் மூலமாக கட்டுப்படுத்துகிறார்.

செல்வப்பெருந்தகை: அவர் யாரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்?

Rahul: He control him. becaus he knows narendra modi financial system. he understand modi link with adani

அர்த்தம்: அவர் மோடியை கட்டுப்படுத்துகிறார். அவருக்கு நரேந்திர மோடியின் நிதிநிலை செயல்முறை பற்றி தெரியும். ட்ரம்ப் அதானிக்கும், மோடிக்குமான தொடர்பையும் புரிந்து வைத்துள்ளார்.

செல்வப்பெருந்தகை: நரேந்திர மோடிக்குத் தெரியும். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார். இந்த தேசத்தை விற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரை எதிர்க்க நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

Rahul: Narendra modi controlled by trump. he wants to same chief minster of tamilnadu

அர்த்தம்: மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்படுத்துகிறார். அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சரை மோடி கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்.

செல்வப்பெருந்தகை: நரேந்திர மோடி என்ன நினைக்கிறார் என்றால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாட்டிலும் முதலமைச்சராக இருப்பவரை கட்டுப்படுத்த முடியும். ஆட்சியை கொண்டு வர முடியும் என்று துடிக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார். 

ராகுல்காந்தி பேசியதற்கும், செல்வப்பெருந்தகை மொழி பெயர்த்ததற்கும் தொடர்பே இல்லாமல் இருப்பதை வைத்து அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு முறை முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கேவி பாலு ராகுல்காந்தி மொழிபெயர்த்தை தவறுதலாக மொழிபெயர்த்து அந்த விவகாரம் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget