மேலும் அறிய

Annamalai About Kamalhaasan: விக்ரம் படத்துல நடிக்கிறதா, இல்ல பிக்பாஸில் நடிக்கிறதான்னு குழப்பத்துல இருக்காரு - அண்ணாமலை

விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக்பாஸில்  நடிப்பதா என கமல் குழப்பத்தில் இருக்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி அராஜகத்தில் ஈடுபட்டதாக சில வீடியோக்களை வெளியிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தியாகராய நகர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அராஜகம் செய்யும் திமுக: 

அப்போது பேசிய அவர், “ தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியாக ஆளும் கட்சியான திமுகவினர் சென்னை மற்றும் கோவையில் அராஜகங்களையும் வன்முறைகளையும் செய்துள்ளது. குறிப்பாக கோவை , நெல்லை , திருச்சி , சென்னையில் வாக்குச்சாவடி அருகே திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல் சென்னையில் மட்டும் தேர்தலின்போது 40 வாக்குச்சாவடி வரை திமுகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் ,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் நடத்திய அராஜகங்களை  மாநில தேர்தல் ஆணையம் கண்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்றும் இவற்றை திசைதிருப்ப மேலூரில் பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்திற்கு பாஜக சார்பில் மனு:-

மேலும் சட்டமன்ற தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் 14 சதவீதம் குறைந்தற்கு முழுமையான காரணம் ஆளும் கட்சி அட்டூழியம் மட்டுமே.  மக்களுக்கு தேர்தல் மீது வெறுப்பை உண்டாக்கி உள்ளது திமுக அரசு. எனவே நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து உயர் நீதிமன்றத்திற்கு பாஜக சார்பில் மனு அளிக்கபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்.முருகன் விவகாரம்:-  

மேலும் எல். முருகனின் வாக்கு எண் வரிசை 1174-இல் அவர் வாக்களிக்கும் முன்பே டிக் செய்துள்ளனர். எனவே டெண்டர்  வாக்கு அளிக்க கோரினர். நாங்கள் முடியாது என்று சொன்னதால் எல்.முருகனை வாக்களிக்க சொன்னர்கள். அவர் வேறொரு வரிசை எண்ணில் வாக்களித்தார்

நாளை இரவு 7 மணி வரை வெற்றிச் சான்றிதழை வழங்க கூடாது என திமுகவினர் கூறியுள்ளனர்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம் , வாக்கு எண்ணிக்கை யின்போதே உடனுக்குடன் வெற்றிச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்.

திமுகவினர் கத்திக் குத்து நடந்தால் மட்டுமே அதை  வன்முறை என்பார்களா..? தேர்தல் நாளில் பல வன்முறை நடந்துள்ளது , அமைதியாக நடந்ததாக கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது" குதிரை பேரம் வாக்கு எண்ணும் மையத்திலே தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அராஜகம்  செய்த திமுக அதிகாரத்திற்கு வரக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான பிறகு எங்களது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிப்போம். " என்றார் 

புர்கா அணிவதை வரவேற்கும் பாஜக:- 

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்கிறது , 'உங்களுக்கு மத நம்பிக்கைதான் முக்கியம் என்றல் வாக்களிக்கவே வேண்டாம் , கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முகம் காட்ட அனுமதிக்குப்போது வாக்களிக்கும்போது முக அடையாளம் காட்ட ஹிஜாப்பை அகற்ற கூடாதா ' என உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது.  மேலூரில் பாஜக ஏஜெண்ட் முகம் காட்டத்தான் சென்னார் , ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை. வேண்டுமென்றால் சிசிடிவியை தேர்தல் ஆணையம் வெளியிடட்டும் என்றும் கூறினார். மேலும் கண்துடைப்பிற்காகவே  இன்று சில வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது.” என்றார். 

காவல்துறை அதிகாரிபோல நடந்து கொள்கிறேனா? 

மேலும் அரசியல்வாதிபோல் இல்லாமல் காவல்துறை அதிகாரிபோல நீங்கள் நடந்து கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை “திமுகவிற்கு எதிராக நான் போலீஸ்காரன்போல  இருந்தால்தான் சில விஷயங்களை செய்ய முடியும்போல.  பழைய அட்ஜஸ்ட்மெண்ட் அரசியல்வாதியாக இருந்தால் மக்களுக்கு நல்லதல்ல.

கமல் கருத்துக்கு பதில்: -

ஜாதி மத அரசியலை பாஜக செய்கிறது என்ற கமலின் கருத்துக்கு பதில் கூறிய அண்ணாமலை, “விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக்பாஸில்  நடிப்பதா  என கமல் குழப்பத்தில் இருக்கிறார். கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் கூறுவேன். அவர் மக்களுக்கு என்ன செய்கிறார்? சாதி மத அரசியல் செய்வதாக எதை வைத்து எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்” என்று பேசினார்.

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget