மேலும் அறிய

Voting Documents List: வாக்காளர் அடையாள அட்டை இல்லையா.! ஓட்டு போட இந்த 12 ஐடி கார்டு கட்டாயம்.? தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

Documents Required for Voting: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 35 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் என்ன செய்யலாம், மாற்று ஏற்பாடு என்ன என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா.?

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் எஸ்ஐஆர் பதவி மூலம் சுமார் 1 கோடி பெயர் நீக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பின் மூலம் சுமார் 27 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையானது வழங்கப்படவில்லை. இதனால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா.? முடியாதா என கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாக்களிக்க தேவையான அடையாள அட்டைகள்

2026-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

  1. ஆதார் அட்டை
  2. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை:
  3. புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
  4. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை/ ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை
  5. ஓட்டுநர் உரிமம்
  6. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card)
  7.  தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை:
  8. இந்திய கடவுச்சீட்டு
  9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்:
  10. மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்:
  11. பாரளுமன்ற/சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு அட்டை மற்றும் வழங்கப்பட்டுள்ள அடையாள
  12. இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை 

வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு

 வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து (5) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும். வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

அடையாள அட்டை இருந்தால் மட்டும் வாக்களிக்க முடியுமா.?

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார் என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20A- இன்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள். அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் தெளிவுபடுத்தப்படுகிறது. மெய்ப்பிக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Embed widget