மேலும் அறிய

ஓட்டு போட ரெடியா.! இவிஎம் மிஷினில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

TN Election EVM machine : தேர்தல் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இறுதி கட்டத்தில் தேர்தல் பணி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை வீதி வீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரம் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எணிக்கைக்கான பணியை தொடங்கியுள்ளது. இதற்காக இவிஎம் எந்திரங்கள் விவிபாட் எந்திரங்கள் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் தயார்படுத்தி வருகிறது.

தயார் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம்

அதன்படி, வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் ஆகிவற்றை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்காக 2-ம் கட்டமாக தேர்வு செய்யும் பணிகள் கடந்த 11-ந் தேதி தொடங்கிய நிலையில் இன்று (16-ந் தேதி) முடிகிறது. இந்தப் பணிகள் முடிந்தவுடன், வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வரிசை எண், பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை அடங்கிய இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்திலான பேலட் பேப்பரை பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் அந்தந்த வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

 அதன்படி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்களை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்வு செய்யப்பட்ட எந்திரங்களின் பட்டியல் மற்றும் ரிசர்வில் வைக்கப்பட்டுள்ள எந்திரங்களின் பட்டியல் போன்றவை அனைத்து வேட்பாளர்களுக்கும் தரப்படும். அந்த எந்திரங்களில் ஒவ்வொரு வாக்காளரின் பெயர், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளிடப்படும். ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த தொகுதிக்கான வேட்பாளர், சின்னம் உள்ளிட்ட விவரங்களை, வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் எந்திரங்களுக்குள் தொழில்நுட்ப ரீதியாக பதிவிறக்கம் செய்வார்கள்.

மாதிரி ஓட்டுக்கள் பதிவு செய்து சரிபார்ப்பு

அப்போது அந்த விவரங்கள் அனைத்தும் அந்த எந்திரங்களின் திரையில் தோன்றும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு அதில் வேட்பாளர் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்து காட்டப்படும். வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கும் வகையில் பட்டனை அழுத்தி, அந்த வாக்கு அவருக்குத்தான் சென்றதா? என்பதையும் உறுதிப்படுத்தி காட்டுவார்கள். இப்படி அனைத்து வேட்பாளர்களின் பெயருக்கும் தலா 5 மாதிரி ஓட்டுகள் போட்டு காட்டப்படும். அதை உறுதி செய்த பின்னர், அந்த வாக்குகளை அழித்துவிட்டு அந்த எந்திரங்களில் எந்த ஓட்டும் இல்லை என்பதும் அவர்களுக்கு காட்டப்படும். பின்னர் அந்த எந்திரங்கள் சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget