மேலும் அறிய

தரம் தாழ்ந்து விமர்சித்தால் திமுக குடும்பம் தாங்காது! – முதலமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

"திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; கும்பகோணம் மாவட்ட வாக்குறுதி என்னானது?" – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!

கும்பகோணம் :  கும்பகோணம் சுவாமிமலையில் முருகப்பெருமானைத் தரிசனம் செய்த பின், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் முனைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

"கும்பகோணம் மாவட்ட வாக்குறுதி என்னவானது?"

2021 தேர்தலுக்கு முன்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதே கும்பகோணம் மண்ணில் நின்று 20 முறைக்கும் மேலாக ஒரு வாக்குறுதியை அளித்தார். "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாகப் பிரிப்போம்" என்றார். ஆனால், ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு மாவட்டத்தைக் கூட திமுக அரசு பிரிக்கவில்லை என அன்புமணி சாடினார். "கடந்த அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் இப்போது மக்கள் ஒரு சான்றிதழ் வாங்கக் கூட கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரை அலைய வேண்டியுள்ளது," என அவர் வருத்தம் தெரிவித்தார்.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற ஆட்சி

தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். "குழந்தைகளை வன்கொடுமை செய்து கொலை செய்யும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழ்நாட்டை எத்தனையோ தலைவர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், ஆனால் இப்படி ஒரு மோசமான சூழல் நிலவியதே இல்லை," என்றார்.

"நானும் டெல்டா காரன் என்பது உலக மகா நகைச்சுவை"

முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை ஒரு 'டெல்டா காரன்' என்று கூறிக்கொள்வதைக் கடுமையாகச் சாடிய அன்புமணி, "இதுதான் உலகிலேயே மிகச்சிறந்த நகைச்சுவை. டெல்டா விவசாயிகள் இன்று மிக மோசமான நிலையில் உள்ளனர். முதலமைச்சரை ஒரு பொம்மை போல வைத்துக்கொண்டு, அவரைச் சுற்றியுள்ள நான்கு 'வியாபாரிகள்' மட்டுமே கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உண்மையான நிலவரம் முதலமைச்சருக்குத் தெரியவில்லை," என விமர்சித்தார்.

இபிஎஸ் மீதான விமர்சனத்திற்கு எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) பற்றி முதலமைச்சர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசி வருவதாக அன்புமணி கண்டனம் தெரிவித்தார். "இபிஎஸ் மீதான தனிநபர் தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்களாலும் முதலமைச்சர் பற்றியும், திமுக குடும்பத்தைப் பற்றியும் பேச முடியும். ஆனால் தரம் தாழ்ந்து போகக்கூடாது என்பதற்காக அமைதியாக இருக்கிறோம். எல்லை மீறினால் நாங்களும் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும்," என எச்சரித்தார்.

"8000 ரூபாய் போலி கூப்பன் செல்லாது"

தேர்தல் நேரத்தில் திமுக கொடுக்கும் 8000 ரூபாய் கூப்பன்கள் மக்களை ஏமாற்றும் வேலை எனச் சாடிய அவர், "மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 8000 ரூபாய் கூப்பன் கொடுத்து மக்களை முட்டாளாக்க முடியாது. இந்த முறை திமுகவுக்கு எதிரான அலை பலமாக வீசுகிறது. அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார்," எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

டெல்டாவின் பாதுகாவலர் இபிஎஸ்

டெல்டா பகுதியை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' அறிவித்தது இபிஎஸ் தான் என்பதைச் சுட்டிக்காட்டிய அன்புமணி, இல்லையென்றால் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் டெல்டாவை நாசமாக்கியிருக்கும் என்றார். விவசாயியான இபிஎஸ்-க்குத் தெரிந்த விவசாயிகளின் கஷ்டம், ஸ்டாலினுக்குத் தெரியாது எனவும் அவர் கூறினார்.

ஐந்தாண்டு கால சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கத் துப்பற்ற நிலையில் திமுக உள்ளதாகவும், மக்கள் நிச்சயம் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget