மேலும் அறிய

Puducherry Election 2026: 30-க்கு 30.. விஜய்யின் 'மாஸ்டர் பிளான்'! வேட்பாளர் பட்டியலால் ஆடிப்போன அரசியல் ஜாம்பவான்கள்!

Puducherry Assembly Election 2026: புதுச்சேரி பாஜகவில் இருந்து நேற்று காலையில் விலகிய சாய் சரவணன் குமார், இரவில் திருபுவனை தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஜுரம் தற்போதே தொற்றிக்கொண்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தனது முதல் தேர்தல் களத்தை அதிரடியாகத் தொடங்கியுள்ளது.

30 தொகுதிகளிலும் தனிப் பாதை

கூட்டணி குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், புதுச்சேரியில் த.வெ.க தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனு அளித்தவர்களில் இருந்து தகுதியான 30 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்

த.வெ.க வெளியிட்டுள்ள பட்டியலில், லாஸ்பேட்டை தொகுதியில் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் வி. சாமிநாதன், ராஜ்பவன் தொகுதியில் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி வி.ஜே. சந்திரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், காரைக்கால் தெற்கு தொகுதியில் கே.ஏ.யூ. அசனா மற்றும் நெட்டப்பாக்கம் தொகுதியில் எல். பெரியசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 30 வேட்பாளர்களின் பட்டியல் இதோ:

1.லாஸ்பேட்டை - வி.சாமிநாதன்

2.காரைக்கால் தெற்கு - கே.ஏ.யூ.அசனா

3.நெட்டப்பாக்கம் (தனி)    - எல். பெரியசாமி 

4.திருபுவனை (தனி): ஏ.கே. சாய் ஜே. சரவணன் குமார்

5.முத்தியால்பேட்டை: ஜே. பிரகாஷ் குமார்

6.பாகூர் - என்.தனவேலு

7.ராஜ்பவன் - வி.ஜே. சந்திரன்

8.உப்பளம் - எஸ்.சிவா

9.உழவர்கரை - எஸ்.சசிபாலன்

10.அரியாங்குப்பம் - எஸ்.குமரவேலு

11.மணவெளி - பி.ராமு

12.வில்லியனூர் - ஆர்.ரமேஷ்

13.முதலியார்பேட்டை - என்.மணிபாலன்

14.மண்ணடிப்பட்டு - கே.பாரதிதாசன்

15.உருளையன்பேட்டை - எஸ்.மரிய பிரான்சிஸ்

16.மங்கலம் - எம்.கே.சத்யா

17.காமராஜ் நகர் - டாக்டர் ஆர்.சுமன்

18.நெல்லித்தோப்பு - எஸ்.விக்னேஷ்வரன்

19.காலாப்பட்டு - டி.சசிகுமார்

20.இந்திரா நகர் - எஸ்.முருகன்

21.கதிர்காமல் - ஆர்.ஜெயந்தி

22.ஊசுடு (தனி) - எஸ். சரவணபவா

23.தட்டாஞ்சாவடி - எம்.பன்னீர்செல்வம்

24.ஏம்பலம் - வி.தமிழ்செல்வன்

25.நெடுங்காடு (தனி) - யு.காமராஜ்

26.திருநள்ளாறு - ஏ.ராஜா முஹம்மது

27.காரைக்கால் வடக்கு - ஏ.வெங்கடேஷ்

28.நிரவி டி.ஆர்.பட்டினம் - ஜி.கணேஷ்

29.மாகே - எம்.பிரிஜேஷ்

30.ஏனாம் - ஏ.தோட்டா ராஜு என புதுச்சேரிக்கான 30 வேட்பளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விசில்' சின்னத்தில் வெற்றி முழக்கம்

வேட்புமனுத் தாக்கலுக்கு மார்ச் 23 கடைசி நாள் என்பதால், த.வெ.க வேட்பாளர்கள் இன்று முதல் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். "நமது வேட்பாளர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வெற்றியை ஈட்ட வேண்டும்" என விஜய் தனது தொண்டர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார்.

இந்நிலையில், புதுச்சேரி பாஜகவில் இருந்து நேற்று காலையில் விலகிய சாய் சரவணன் குமார், இரவில் திருபுவனை தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021-ல் பாஜக சார்பில் வென்ற இவர், 2025 ஜூன் வரை முதலமைச்சர் ரங்கசாமியின் அமைச்சரவையில் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி மற்றும் திமுக-காங்கிரஸ் அணிகளுக்கு இடையே நேரடிப் போட்டி நிலவி வந்த சூழலில், விஜய்யின் த.வெ.க-வின் வருகை ஒரு மும்முனைப் போட்டியை உருவாக்கி, தேர்தல் களத்தை தகிப்படையச் செய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget