மேலும் அறிய

TN Election Results: திமுகவிற்கு வந்த சோதனை.! வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு தோல்வி.! தொண்டர்கள் அதிர்ச்சி.!

Tamil Nadu Election Results 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், இதுவரை திமுக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, அக்கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் தோல்வியை தழுவியதால் தொண்டர்கள் அதர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மாபெரும் சாதனையை விஜய் நிகழ்த்தியுள்ளது ஒருபுறம் என்றால், திமுக வரலாற்றிலேயே இல்லாத வகையில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளது, திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. அதில், சாதனை அளவாக சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவானது. அதைத் தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி

இந்நிலையில், காலை முதலே கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்தார். தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

வி.எஸ்.பாபு - தவெக  - 82,180 வாக்குகள்

மு.க. ஸ்டாலின் - திமுக - 72,988 வாக்குகள்

அதிமுக - 18,182 வாக்குகள்

நாதக - 4,974 வாக்குகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தோல்வியால் திமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், முதலமைச்சராக இருந்தபோது தோல்வியடைந்தவர்களில், பக்தவச்சலம், ஜெயலலிதாவை தொடர்ந்து  தற்போது மு.க. ஸ்டாலின் தோல்வியை தழுவியுள்ளார்.

காட்பாடியில் தோல்வியை தழுவிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

இதேபோல், காட்பாடி சட்டமன்ற தொகுதியில், திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தோல்வியடைந்துள்ளார். இந்த தொகுதியில் துரைமுருகன் இதுவரை 8 முறை, அதாவது 1971-லிருந்து 2021 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், காட்பாடியில் வெற்றி பெற்ற அவர், ராணிப்பேட்டையில் இரு முறை போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

எனினும், கடந்த தேர்தலில் துரைமுருகன் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் மிகவும் கடுமையாக போராடியே அதிமுக-வின் வி. ராமுவை வீழ்த்தினார். ஆனால், இந்த முறை விடாத வி. ராமு வெற்றி முகத்தை கண்டுள்ளார். இதன் மூலம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு காட்பாடியில் அதிமுக வெற்றி பெறுகிறது.

திமுக வரலாற்றில் இல்லாத தோல்வி

தமிழ்நாட்டில் 75 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், பொதுச் செயலாளரும் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளதால், தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு தோல்வி நிகழ்ந்ததில்லை.

முன்பு, 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வினால், தமிழ்நாட்டில் திமுகவிற்கு எதிரான கடுமையான சூழல் நிலவிய போதிலும், அந்த வருடம் நடந்த தேர்தலில், 2 இடங்களை மட்டுமே வெற்றி பெற்று கட்சி படுதோல்வியை தழுவிய போதிலும், திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியை தழுவியுள்ளதால், இதுவரை திமுக வரலாற்றிலேயே இல்லாத ஒரு நிகழ்வாக இது மாறியுள்ளது. அதேபோல், 1996 முதல் காட்பாடி தொகுதியை தனது கைக்குள் வைத்துள்ள கட்சியின் பொதுச் செயலாளரான துரைமுருகனும் தோல்வியடைந்துள்ளது, திமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது இரண்டாம் இடத்தில் உள்ள திமுக எதிர்க்கட்சியானால், உதயநிதி ஸ்டாலின் தான் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Trump Vs China Russia: “ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
“ஈரானுக்கு ஹெல்ப் பண்ணீங்கன்னா, அப்புறம்..“ சீனா, ரஷ்யாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்; என்ன சொன்னார் பாருங்க
Top 3 Most Fuel Efficient Hybrid SUVs: ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
ஹைப்ரிட்லயே நாங்க தான் டாப்.! பக்கா சொகுசுடன் அதிகமான மைலேஜும் தரும் 3 SUV-க்கள் எவை தெரியுமா.?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
Embed widget