மேலும் அறிய

TN Election Voting Percentage: தமிழக தேர்தல் 1 மணி நிலவரம் - 56.81% வாக்குகள் பதிவு - எந்த மாவட்டம் முதலிடம்?

Voting Percentage in Tamil Nadu Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 1 மணி நிலவரப்படி 56.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

Voting Percentage in Tamil Nadu Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 1 மணி நிலவரப்படி, தகுதியான 5.73 கோடி வாக்காளர்களில் பாதிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

தமிழக தேர்தல் - வாக்குப்பதிவு விவரம்:

TN Election 2026 Voter Turnout 1 PM Update: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறிவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கத்தை கணித்து காலை முதலே வாக்காளிக்க ஏராளமானோர் வாக்குச்சாவடி மையங்களில் குவிந்தனர். அதன்படி, முதல் 2 மணி நேரத்தில் அதாவது காலை 9 மணிக்கே 17.69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்த வாக்கு சதவிகிதமானது 37.56 சதவிகிதமாக அதிகரித்தது. அதாவது 9 மணி தொடங்கி 11 மணி வரையிலான காலகட்டத்தில், தொகுதியான வாக்காளர்களில் சுமார் 20 பேர் வாக்களித்தனர்.

தமிழக தேர்தல் - 1 மணி நிலவரம்

இந்நிலையில், ஒரு மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 56.81சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 11 மணிக்கு பிறகு சுமார் 17.2 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோக, ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான மாவட்டங்களில் 1 மணி நிலவரப்படி வாக்கு சதவிகிதமானது 50 சதவிகிதத்தை கடந்துள்ளது. பெரம்பலூரில் 57.55 சதவிகிதம், விருதுநகரில் 56.48 சதவிகிதமும், ராமநாதபுரத்தில் 51.43 சதவிகிதம், நெல்லை மாவட்டத்தில் 50.40 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு விவரம்

  • அரியலூர் - 55.18%
  • செங்கல்பட்டு - 54.58%
  • சென்னை - 54.58%
  • கோவை - 58.24%
  • கடலூர் - 55.13%
  • தர்மபுரி - 59.02%
  • திண்டுக்கல் - 59.79
  • ஈரோடு - 61.79%
  • கள்ளக்குறிச்சி - 57.15%
  • காஞ்சிபுரம் - 58.98%
  • கன்னியாகுமரி - 50.35%
  • கரூர் - 60.77%
  • கிருஷ்ணகிரி - 56.21%
  • மதுரை - 54.75%
  • மயிலாடுதுறை - 53.59%
  • நாகப்பட்டினம் - 57.07%
  • நாமக்கல் - 62.51%
  • பெரம்பலூர் - 57.55%
  • புதுக்கோட்டை - 56.78%
  • ராமநாதபுரம் - 51.54%
  • ராணிப்பேட்டை - 58.62%
  • சேலம் - 61.42%
  • சிவகங்கை - 53.50
  • தென்காசி - 54.24%
  • தஞ்சாவூர் - 54.83%
  • நீலகிரி - 50.42%
  • தேனி - 55.63%
  • திருவள்ளூர் - 55.45%
  • திருவாரூர் - 56.00%
  • தூத்துக்குடி - 52.55%
  • திருச்சி - 57.66%
  • திருநெல்வேலி - 50.73%
  • திருப்பத்தூர் - 57.42%
  • திருப்பூர் - 62.97%
  • திருவண்ணாமலை - 58.23%
  • வேலூர் - 57.49%
  • விழுப்புரம் - 58.23%
  • விருதுநகர் - 57.27%

முதலமைச்சர்கள் தொகுதி எப்படி?

முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 56.59 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் 56.24 சதவிகித வாக்குகளும், திருச்சி கிழக்கில் 55.95 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 60.98 சதவிகித வாக்குகளும், சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதியில் 51.36 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget