மேலும் அறிய

Tamil Nadu Election 2026: நாளை தேர்தல்: ஓட்டு போட பூத் ஸ்லிப் கட்டாயமா? ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்வது எப்படி?

Tamil Nadu Election 2026 Polls: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி? - முழுமையான வழிகாட்டுதல்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது. ஜனநாயகக் கடமையாற்றக் காத்திருக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும் மிகவும் அவசியமான ஆவணம் பூத் ஸ்லிப் (Booth Slip) எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு ஆகும்.

இந்த பூத் ஸ்லிப்பைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக நாமே ஆன்லைனில் மிக எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். எப்படி?

பூத் ஸ்லிப் என்றால் என்ன? இது எதற்கு?

நீங்கள் எந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வேண்டும்? வாக்காளர் பட்டியலில் உங்கள் வரிசை எண் என்ன? வாக்களிக்கும் தேதி மற்றும் நேரம் போன்ற மிக முக்கியமான தகவல்கள் இந்தச் சீட்டில் இடம்பெற்றிருக்கும். இதை கையில் வைத்திருந்தால், வாக்குச் சாவடியில் எந்தவித அலைச்சலுமின்றி நேரடியாக, வாக்களிக்கும் அறைக்கே சென்று எளிதாக வாக்களிக்க முடியும்.

பூத் ஸ்லிப்பை டவுன்லோடு செய்வது எப்படி?

  1. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும்.

  2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள "Search in Electoral Roll" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. இப்போது உங்களைப் பற்றிய தகவல்களைத் தேட மூன்று வழிகள் திரையில் தோன்றும்:

    • விவரங்கள் மூலமாக (Search by Details): உங்கள் பெயர், தந்தையின் பெயர், வயது, மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றை உள்ளிட்டுத் தேடலாம்.

    • வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாக (Search by EPIC): உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை (EPIC Number) பதிவிட்டுத் தேடலாம். 

    • மொபைல் எண் மூலமாக (Search by Mobile): வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுத்தும் தேடலாம்.

  4. மேற்கண்ட மூன்றில் ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து, சரியான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டைப் பிழையின்றி டைப் செய்து Search பட்டனை அழுத்தவும்.

  5. இப்போது திரையில் உங்கள் வாக்காளர் விவரங்கள் முழுமையாகத் தோன்றும்.

  6. அதன் பக்கத்தில் உள்ள 'Print Voter Information Slip' அல்லது 'View Details' என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் பூத் ஸ்லிப் பிடிஎஃப் வடிவில் டவுன்லோடு ஆகிவிடும். அதைப் பிரிண்ட் எடுத்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Voter Helpline செயலி மூலமாக பெறுவது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் செயலி மூலமாக இன்னும் விரைவாக இந்தச் சீட்டைப் பெற முடியும்.

  1. கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Voter Helpline என்ற அதிகாரப்பூர்வச் செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யவும்.

  2. செயலியைத் திறந்து, முகப்புப் பக்கத்தில் உள்ள "Search Your Name in Electoral Roll" என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. இதில் உங்கள் வாக்காளர் அட்டையில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்தோ, அல்லது உங்கள் EPIC எண்ணைப் பயன்படுத்தியோ தேடலாம்.

  4. உங்கள் விவரங்கள் திரையில் வந்தவுடன், கீழே உள்ள டவுன்லோடு குறியீட்டை அழுத்தி உங்கள் மொபைலிலேயே பூத் ஸ்லிப்பைச் சேமித்துக்கொள்ளலாம்.

பூத் ஸ்லிப் கட்டாயமா?

பூத் ஸ்லிப் என்பது உங்களுக்குத் தகவல்களைத் தரும் சீட்டு மட்டுமே. இது அதிகாரப்பூர்வ அடையாள அட்டை அல்ல. இது கட்டாயமும் இல்லை. எனவே, வாக்களிக்கச் செல்லும்போது அசல் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசென்ஸ் ஆகிய ஏதேனும் ஓர் அரசு அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாள அட்டையைக் கட்டாயம் கையில் கொண்டு செல்ல வேண்டும்.

நேரடியாகப் பெறுவது எப்படி?

வழக்கமாகத் தேர்தல் தேதிக்கு சில நாட்களுக்கு முன்பாகவே, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) உங்கள் வீடுகளுக்கே நேரடியாக வந்து இந்த பூத் ஸ்லிப்பை வழங்கிவிடுவார்கள். ஒருவேளை அப்படி வழங்கப்படாவிட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ மட்டுமே நீங்கள் ஆன்லைனில் எடுக்க வேண்டியதிருக்கும்.

சந்தேகங்களுக்கு

வாக்காளர் பட்டியல் அல்லது பூத் ஸ்லிப் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget