Deputy Mayor List: 21 மாநகராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட துணை மேயர்கள் - விவரம் உள்ளே..!
Tamil Nadu Deputy Mayor List 2022: தமிழ்நாடு முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சி துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2ஆம் தேதி பதவியேற்றனர். இன்று நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளில் 20 மாநகராட்சி துணை மேயர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 21 மாநகராட்சி துணை மேயர் பதவிகளில் திமுக 15, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.
துணை மேயர்கள் லிஸ்ட்
சென்னை மாநகராட்சி துணை மேயர் - மகேஷ் குமார் (திமுக)
கோவை மாநகராட்சி துணை மேயர் - வெற்றி செல்வன் (திமுக)
திருச்சி மாநகராட்சி துணை மேயர் - திவ்யா தனக்கோடி (திமுக)
நெல்லை மாநகராட்சி துணை மேயர் - கே.ஆர்.ராஜூ (திமுக)
தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் - ஜெகன் பெரியசாமி (திமுக)
மதுரை மாநகராட்சி துணை மேயர் - நாகராஜன் (சிபிஎம்)
தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் - ஜி.காமராஜ் (திமுக)
ஆவடி மாநகராட்சி துணை மேயர் - சூர்யகுமார் (மதிமுக)
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் - குமரகுருநாதன் (காங்கிரஸ்)
கடலூர் மாநகராட்சி துணை மேயர் - தாமரை செல்வன் (விசிக)
கரூர் மாநகராட்சி துணை மேயர் - தாரணி சரவணன் (திமுக)
ஓசூர் மாநகராட்சி துணை மேயர் - ஆனந்தைய (திமுக)
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் - மேரி பிரின்ஸி (திமுக)
திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் - ராசப்பா (திமுக)
ஈரோடு மாநகராட்சி துணை மேயர் - செல்வராஜ் (திமுக)
சேலம் மாநகராட்சி துணை மேயர் - சாரதா தேவி (காங்கிரஸ்)
திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் - பாலசுப்பிரமணியம் (சிபிஐ)
வேலூர் மாநகராட்சி துணை மேயர் - சுனில் குமார் (திமுக)
சிவகாசி மாநகராட்சி துணை மேயர் - விக்னேஷ் பிரியா (திமுக)
கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் - தமிழழகன் (திமுக)
தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் - அஞ்சுகம் பூபதி (திமுக)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்