மேலும் அறிய

TN Election Rewind: 14 ஓட்டுகளில் பறிபோன வெற்றி..! சிங்காநல்லூர் தொகுதியில் நடந்தது என்ன?ந்தது என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 14 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றது அப்போது பெரும் பேசுபொருளாக மாறியது.

Tamil Nadu Assembly Election: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்திற்கு குறைவான நாட்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் அரங்கேறிய சுவாரஸ்யமான நிகழ்வுகளில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்றை கீழே காணலாம்.

சிங்காநல்லூர் தொகுதி:

தேர்தலைப் பொறுத்தமட்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும், ஓராயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றாலும் தோல்வி தோல்வியே ஆகும். அந்த வகையில், 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் பற்றி கீழே காணலாம். 

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுக  - அதிமுக -தேமுதிக என்று மும்முனைப் போட்டியுடன் நடந்தது. கோவை மாவட்டத்தில் ஏராளமான நூற்பாலைகள் உள்பட தொழிற்சாலைகள் உள்ளது. குறிப்பாக, சிங்காநல்லூர் தொகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளும், தொழிலாளர் நலனுக்காக தொழிற்சங்கங்களும் உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் கோவை மாவட்டத்தில் இந்த தொகுதியில் மட்டும் அந்த தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு பதிலாக தொழிற்சங்க நிர்வாகிகளை களமிறக்கியன அரசியல் கட்சிகள்.

விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை:

காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி-வில் இருந்து விலகி, அதிமுக-வில் இணைந்தவர் சின்னச்சாமி. இவருக்கு அதிமுக சார்பில் சிங்காநல்லூர் தாெகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாயப்பு வழங்கினார். அப்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் இந்த தொகுதியைப் பெற்று மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத்தின் முக்கியமான நபராகிய செளந்தர்ராஜனை களமிறக்கியது. 

இந்த தொகுதியில் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளில், சின்னசாமியும், செளந்தர்ராஜன் இடையே சரிசம போட்டி நிலவியது. ஒருவர் முன்னேற மீண்டும் மற்றொருவர் முன்னேற பெரும் பரபரப்பை வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் அதிமுக வேட்பாளர் சின்னசாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செளந்தர்ராஜனைக் காட்டிலும் 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

14 வாக்குகள்:

சின்னசாமி 1 லட்சத்து 283 வாக்குகளும், செளந்தர்ராஜன் 1 லட்சத்து 269 வாக்குகளும்  பெற்றனர். தேமுதிக வேட்பாளர் பொன்னுசாமி 31 ஆயிரத்து 268 வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர் ராஜ்குமார் 2 ஆயிரத்து 19 வாக்குகள் பெற்றார். அந்த தேர்தலில் 14 வாக்குகள் வித்தியாசத்தில் சின்னசாமி வெற்றி பெற்றது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ம் ஆண்டுதான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget