மேலும் அறிய

2026 சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் அதிரடி உயர்வு! எவ்ளோ தெரியுமா?

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக, தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதன்படி தேர்தல் பணியாளர்களுக்கு அவர்களின் பணிநிலைகளுக்கு ஏற்ற வகையில் ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு, புதிய ஊதியம் 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக வாக்கு எண்ணும் உதவியாளருக்கு புதிய ஊதியம் 1,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

எதற்காக இந்தப் பயிற்சித் திட்டம்?

தேர்தல் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் பின்வருமாறு உயர்த்தியுள்ளது.

பதவி  பழைய ஊதியம் (.ரூ) திருத்தப்பட்ட புதிய ஊதியம் (ரூ.) 
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் Rs.1700 Rs.3000
வாக்குப்பதிவு அலுவலர்

Rs.1300

Rs.2600
வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்

Rs.850

Rs.1500
வாக்கு எண்ணும் உதவியாளர்

Rs.650

Rs.1400
நுண் பார்வையாளர்

Rs.1000

Rs.2000

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/ வெள்ளி), இதர பொருட்கள்/ இலவசங்கள் என ஏராளமான பொருட்களைக் கைப்பற்றி உள்ளன.

இதன் மொத்த மதிப்பு 300 கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
Embed widget