மேலும் அறிய

சிவகங்கை அதிமுக வேட்பாளர் PR. செந்தில்நாதன்: 2026 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு! தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

அரசியல் அனுபவமும், தொகுதி மட்டத்தில் நீண்டகால பணியாற்றிய பின்னணியும் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து இந்த தொகுதியை தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக PR. செந்தில்நாதன் அறிவிப்பு.

சிவகங்கை சட்ட மன்ற தொகுதி - 2026 தேர்தல் களம்
 
சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி தொகுதி) உள்ளன. இதில் காரைக்குடிக் காங்கிரஸ் மாங்குடியும், திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனு, மானாமதுரையில் முன்னாள் அமைச்சர் தமிழரசியும், சிவகங்கையில் அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனும் தற்போது எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகின்றனர். இந்தநிலையில் 2026 சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் களம் காண்கிறார்
 
சிவகங்கை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக இந்த முறையும் PR. செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அதே தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், சிவகங்கை மாவட்ட கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். 1967 ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி பிறந்த இவர், 58 வயதுடையவர். B.Sc., L.L.B., கல்வித் தகுதி பெற்றவர். BC (கள்ளர்) சமூகத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊர் காரைக்குடி எனவும், தற்போதைய அரசியல் பணிகளை சிவகங்கை மாவட்டத்தை மையமாகக் கொண்டு மேற்கொண்டு வருகிறார். அரசியல் அனுபவத்தில் 1991 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர், ஆரம்பத்தில் கிளை கழக செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்தவர். தேவகோட்டை ஒன்றிய அளவில் கழக பொறுப்புகள், மாவட்ட பிரதிநிதி, ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உள்ளிட்ட பதவிகளிலும் பணியாற்றியுள்ளார்.
 
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
 
அரசுப் பதவிகளாக 2001 முதல் 2006 வரை மாவட்ட கவுன்சிலராகவும், பின்னர் தேவகோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2014 முதல் 2019 வரை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது சிவகங்கை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் இவர், மீண்டும் அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. அரசியல் அனுபவமும், தொகுதி மட்டத்தில் நீண்டகால பணியாற்றிய பின்னணியும் இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து இந்த தொகுதியை தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 
தொகுதி நிலவரம்
 
சிவகங்கை மாவட்டம் முழுவதும் சற்று பின் தங்கிய பகுதியாக இருக்கிறது. குறிப்பாக காரைக்குடி சட்ட மன்ற தொகுதி அடைந்த முன்னேற்றம் கூட சிவகங்கை அடையவில்லை. பெரிய அளவிலான தொழில் வாய்ப்புகள் இல்லாதது. இந்த சட்ட மன்ற தொகுதிக்கு தொய்வாக பார்க்கப்படுகிறது. தொழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் குற்ற சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பகுதியில் போதிய தொழிற்சாலை வசதிகள் வேண்டும் என்பதும், மதுரை அரசு மருத்துவமனைக்கு நிகரான மருத்துவ வசதி தேவை என்பது கோரிக்கையாக உள்ளது. அதே போதிய கல்லூரிகளும் இல்லை என்பதும் குறையாக பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget