SIR Last Date : தமிழகத்தில் SIR பணிகள் இறுதி கட்டம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்... மக்களே நோட் பண்ணிக்கோங்க..
SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இன்று (டிசம்பர் 11) என்பதால்,வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் தவறவிட வேண்டாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் (SIR) தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த திருத்த பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக நாளை (டிசம்பர் 11) இருக்கும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
SIR என்றால் என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன் முதன்முதலில் நடைமுறைக்கு வந்த SIR திட்டம், அங்கு இருந்த போலி வாக்காளர்கள், இரட்டைப் பதிவுகள், மறைந்தவர்களின் பெயர்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதில் முக்கிய பங்காற்றியது. அப்போது பல லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதே முறை தற்போது தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் பணி அழுத்தம் – காலக்கெடு நீட்டிப்பு
சார் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது பணிச்சுமை அதிகமாக இருப்பதாக முன்வந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த பணிகளுக்கான காலக்கெடுவை சமீபத்தில் நீட்டித்தது. நீட்டிப்பிற்குப் பிறகு, தமிழகத்தில் SIR விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க இன்று(டிசம்பர் 11) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு – தற்போதைய நிலவரம்
தமிழகத்தில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 66,470 பிஎல்ஓக்கள் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டு 3,718 பிஎல்ஓக்கள் இந்த பணிகளை செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் SIR தொடர்பாக இதுவரை பெரிய புகார்கள் எதுவும் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
SIR-க்கு எதிர்ப்பு
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் நபர்களின் பெயர்களே குறிவைத்து நீக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த புகார் உச்ச நீதிமன்றத்திலும் முன்வைக்கப்பட்டது.எனினும், SIR பணிகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தி, பணிகளை தொடர அனுமதி அளித்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் – டிசம்பர் 16
இந்த SIR பணிகள் முடிந்தவுடன், டிசம்பர் 16 அன்று தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது எத்தனை பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன எனபது தொகுதி வாரியாக தெளிவாக வெளிவரும். மேலும், தவறுதலாக பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும், சரிபார்க்கவும் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்குகிறது.
நீட்டிக்கப்பட வாய்ப்பு?
SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இன்று (டிசம்பர் 11) என்பதால்,வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் தவறவிட வேண்டாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) காலக்கெடுவை தேர்தல் ஆணையம் (EC) நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஏற்கெனவே கேரளாவில் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் சமர்ப்பிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு பிறகே நீட்டிப்பு குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.






















