மேலும் அறிய

கோவை அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்படும் சர்மிளா சந்திரசேகர் வேட்பு மனுத்தாக்கல்..!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் மனைவி சர்மிளா அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கியது. கோவையில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறவிப்பு தாமதமானதால், வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் கட்சிகளிடையே சுணக்கம் நிலவியது. இந்நிலையில் அதிமுக, பா.ஜ.க.வில் பெரும்பாலான வார்டுகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதாலும், திமுகவில் முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் விறுவிறுப்படைந்தது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 மையங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. 

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 93 வார்டுகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 38 வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் மனைவி சர்மிளா அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற சர்மிளா, அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வேட்பு மனுத் தாக்கலின் போது சர்மிளாவுடன் அவரது கணவர் சந்திரசேகரும், கட்சி நிர்வாகி ஒருவரும் உடன் சென்றனர். திமுக உட்பட பிறகட்சி  வேட்பாளர்களுடன் ஒருவரை மட்டும் அனுமதித்துவிட்டு சர்மிளாவுடன்  மட்டும் இருவரை அனுமதித்தற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்த பின் பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர், ”கோவை மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை. அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த வார்டில்  வெற்றி பெறுவேன். வார்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன். பெண்களை மனதில் வைத்து நிறைய சமூக பணிகளை அறக்கட்டளை மூலம் செய்துள்ளேன். மேயர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என அவர் தெரிவித்தார்.

கோவை அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்படும் சர்மிளா சந்திரசேகர் வேட்பு மனுத்தாக்கல்..!

இதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. சிலர் வித்தியாசமான முறைகளில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 32வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ள மகேஷ்வரன், சிவானந்த காலனி பகுதியில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த அவர் குதிரையில் வந்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதை சுட்டிக் காட்டும் விதமாக குதிரையில் வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் தான் வெற்றி பெற்றால் குதிரையை போல வேகமாக தனது வார்டு மக்களுக்காக உழைப்பேன் எனவும் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget