Punjab Election Result 2022: "பதவியை நான் ஆளுவேன், ஒருபோதும் பதவி என்னை ஆளாது" : பஞ்சாப் வெற்றி வேட்பாளர் பகவந்த் மான்
Punjab Election Result 2022: சிஎம் என்றால் சாமானியர் என்றும், உயர் பதவி கிடைத்தாலும் சாமானியராக தான் இருப்பேன் என ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
![Punjab Election Result 2022: Punjab Election : I Become Chief Minister Won't Go To My Head says AAP Bhagwant Mann Punjab Election Result 2022:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/8e28bf2e42aa20e79b243860940b9f0e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 117 இடங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் 59 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்து கிட்டத்தட்ட ஆட்சியை கைப்பற்றியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சரண்ஜித் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாபில் க்ளீன் ஸ்வீப் அளித்துள்ள நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் தன்னைப் பொறுத்தவரை, "சிஎம் என்றால் சாமானியர்" என்றும், உயர் பதவி கிடைத்தாலும் சாமானியராக தான் இருப்பேன் என்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
#ElectionResultsWithABPNadu | பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கிறது ஆம் ஆத்மி https://t.co/wupaoCQKa2 | #Elections2022 #PunjabElections2022 #PunjabElections #PunjabElections #AAP pic.twitter.com/eVhgz9dPKr
— ABP Nadu (@abpnadu) March 10, 2022
தொடர்ந்து அவர் இதுகுறித்து பேசுகையில், “புகழ் எப்பொழுதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்குமே தவிர முதலமைச்சரானால் அது என் தலையில் ஏறாது. பதவியை நான் ஆளுவேன், ஒருபோதும் பதவி என்னை ஆளாது. நான் இன்னும் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவே விரும்புகிறேன். நான் முதலமைச்சரானால் எனது அரசியல் என் தலையை சீர்குலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். அதையேதான் நானும் விரும்புகிறேன். மீண்டும் பஞ்சாப்பை பஞ்சாப் ஆக்குவோம். இதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை .
மாஃபியாவால் நிரம்பி வழிக்கிறது பஞ்சாப். மணல் மாபியா, நில மாபியா, கேபிள் மாபியா, போக்குவரத்து மாபியா... கலால் மாபியா என்று நிறைய இருக்கிறது. இதை எதையும் நான் விட்டு வைக்கபோவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)