Perambalur Election Results 2024: பெரம்பலூரில் வெற்றியை உறுதி செய்த திமுகவின் அருண் நேரு!
Lok Sabha Election Results 2024: பெரம்பலூர் தொகுதியில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு 5,98,003 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
தி.மு.க. அருண் நேரு - 598003
அ.தி.மு.க. சந்திரமோகன் - 212495
பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே. கட்சி நிறுவனர் பாரிவேந்தர் - 160606
நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி
முதல் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு அதிமுக வேட்பாளர் சந்திர மோகனைவிட விட 38,693 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிக்கிறா
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில், மத்திய தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக திகழ்வது பெரம்பலூர் தொகுதி. திருச்சி அருகிலே இருப்பதால் பெரம்பலூர் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பெரம்பலூர் தொகுதி:
இந்த தொகுதியில் நடப்பு மக்களவைத் தேர்தலில், மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் முக்கிய வேட்பாளர்களாக தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, அ.தி.மு.க. சார்பில் சந்திரமோகன், பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே. கட்சி நிறுவனர் பாரிவேந்தர், நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி போட்டியிட்டுள்ளனர்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இந்த தொகுதிக்குள் வருகிறது. இந்த தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. தொகுதிகள் மாறி, மாறி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 39 ஆயிரத்து 315 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 97 ஆயிரத்து 984 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 41 ஆயிரத்து 200 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 131 பேரும் அடங்குவார்கள். மொத்தம் சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், கடந்த 19ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 11 லட்சத்து 19 ஆயிரத்து 881 வாக்குகள் மட்டுமே பதிவாகியது. அதாவது, பெரம்பலூர் தொகுதியில் மொத்தம் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகியது.