மேலும் அறிய

Karunas: அடிமை அதிமுகவை விரட்ட தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: முதல்வரைச் சந்தித்த கருணாஸ் அறிவிப்பு!

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகரும் மு.பு.க. கட்சியின் தலைவருமான கருணாஸ் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்க உள்ளதாக, செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சனானத்தை வீழ்த்தி, சமூக நீதி காக்க 2024 நாடாளுமன்றத் தேர்தவில்‌ முக்குலத்தோர்‌ புலிப்படை கட்சி தி.மு.க.வை ஆதரிக்கிறது என்று முக்குலத்தோர்‌ புலிப்படைக்‌ கட்சித்தலைவர்‌ கருணாஸ்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பா.ஜ.க. எனும்‌ பாசிச சனாதன சக்தியை விழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட நாம்‌ ஒரு குடையின்‌ கீழ்‌ அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத்தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்க வேண்டும்‌.

மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில்‌ மத நல்லிணக்கம்‌ மாண்புற மக்கள்‌ ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இந்தியா' கூட்டணியை 2024 நாடாளுமன்றத்‌ தேர்தல்‌ களத்தில்‌ வெற்றிபெறச்‌ செய்யவேண்டும்‌ என்கிற ஒற்றை இலக்குடன்‌ தி.மு.க.வை முக்குலத்தோர்‌ புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

இனி மோடி ஆட்சி மீண்டும்‌ வந்தால்‌ இந்திய பெருமுதலாளிகளின்‌ கையில்‌ கார்ப்பரேட்டின்‌ கொள்ளைக்‌ கூடாரமாகிவிடும்‌. கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில்‌ ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின்‌ மக்கள்‌ விரோத ஆட்சியை அகற்றிட. தமிழ்நாட்டில்‌ அடிமை துரோகக்‌ கட்சியான அ.தி.முகவை இந்த நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்‌.

தி.மு.க.விற்கு பல்வேறு தோழமைக்‌ கட்சிகள்‌ தமது ஆதரவை தெரிவிக்கும்‌ அதே வேளையில்‌ பலம்‌ வாய்ந்த இக்‌ கூட்டணியை 40 இடங்களிலும்‌ வெற்றிப்பெற செய்ய திமு.க.விற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மக்கள்‌ விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அ.தி.மு.கவை வீழ்த்த திராவிட முன்னேற்றக்‌ கழகத்துடன்‌ இணைந்து 40 தொகுதிகளிலும்‌ முக்குலத்தோர்‌ புலிப்படைக்‌ கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்‌.

முக்குலத்தோர்‌ புலிப்படை கட்சியின்‌ 5 முக்கிய கோரிக்கைகள்‌:

1. மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப்‌ போராட்ட வீரர்‌ தலைவர்‌ பசும்பொன்‌ முத்து ராமலிங்கத் தேவரின்‌ பெயரைச்‌ சூட்ட மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்‌.
2. பசும்பொன்‌ தேவர்‌ ஜெயந்தி விழாவை (அக்டோபர்‌ 30) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்‌.
3. மறைந்த முன்னாள்‌ முதல்வர்‌ ஜெயலலிதாவால்‌ கள்ளர்‌ - மறவர்‌ - அகமுடையார்‌ ஆகியோரை தேவரினம்‌ என அறிவித்த அரசாணையை நடமுறைப்படுத்தவேண்டும்‌. இரண்டரை கோடி மக்கள்‌ தொகை உள்ள முக்குலத்தோர்‌ சமுதாயத்திற்கு 25% இடஒதுக்கீடு வழங்கவேண்டும்‌.

4. தமிழ்நாட்டில்‌ சாதிவாரியான மக்கள்‌ தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்‌
5. ஒன்றிய அரசு புதிதாக கட்டியுள்ள பாராளுமன்ற வளாகத்தில்‌ வெள்ளையரை வெளியேற்ற அரும்பாடுபட்ட சுதந்திரப்‌ போராட்ட விரர்கள்‌ மாமன்னர்‌ மருது பாண்டியர்கள்‌ சிலை அமைக்க வேண்டும்‌.

இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்

வீடியோ

BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்
Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
Embed widget