மேலும் அறிய
Lok Sabha Elections 2024: கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திசைதிருப்பும் முயற்சியாக கச்சத்தீவு விவகாரத்தில் பச்சைப்பொய் பரப்பி வருகின்றனர்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன்
மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை.
மதுரை நேதாஜி ரோடு, ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "இந்த பாராளுமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை. இரண்டே இரண்டு கருத்தை மட்டும் வைக்க விரும்புகிறேன். தமிழகம் பழைய தவறான பாதையை விட்டு தற்போது முன்னேறி உள்ளது. என் உழைப்பு முதல்வரின் தயவால் எண்ணற்ற திட்டங்கள் மதுரைக்கும், மதுரை மாநகராட்சிக்கும் கிடைத்துள்ளது. மாநிலத்தில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம் 20லட்சம் மாணவர்கள், 13 லட்சம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1 கோடி பேர் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1.15 கோடி மகளிர்க்கு வந்து சேர்ந்துள்ளது. 1ரூபாய்க்கு 35 பைசா வரியை கொடுத்ததை நிறுத்தி 29 பைசா கொடுப்பதை நாடாளுமன்றத்தில் பெருமையாக பேசுகிறார்கள்.
கொடூரமான ஆளுநர்
பேரிடரின் போது உதவி கேட்டால் ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. மாநிலப்பட்டியலில் உள்ள கல்வி உரிமை நிதி உரிமையை பறித்துள்ளனர். கொடூரமான ஆளுநரை குடுத்ததை படிக்கத்திறனற்ற ஆளுநரை பொறுப்பில் வைத்துள்ளனர். பலகோடி ரூபாய் எதற்காக செலவு செய்கிறோம் என தெரியாமல், எந்தப்பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளனர். கச்சத்திவு குறித்து ஆர்.டி.ஐ., வெளியாகி உள்ளது என பச்சைப்பொய் புரளியை எழுப்பி உள்ளனர். படித்த மாநிலத்தில் டூபாக்கூர் வேலை பார்க்க முயல்கின்றனர். ஜனநாயக உயிரா சாவா என்ற அடிப்படையிலான தேர்தல். ஜனநாயகம் ஏற்கனவே செத்துவிட்டது. பிணத்தை சுடுகாட்டுக்கு கொண்டு போய் எரிக்கப்போகிறார்களா? அல்லது அப்பர் தன் அடியார் மகனின் உடலை மந்திரம் சொல்லி எழுப்ப முடியுமா. ஜனநாயகம் மீதும் நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள். பிரிட்டீஸ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதா என்பதை போல பாஜக பற்றி மக்கள் யோசிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இரண்டு மாநில முதல்வர்களை கைது செய்து, எதிர்க்கட்சிகளின் வங்கி கணக்கை முடக்கி சமமான தேர்தலை சந்திக்க முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்.
ஜனநாயகம் அழிந்துவிடும்
ஏன் 10 நாட்களுக்கு முன் ஏன் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்கிறார். புதிய சட்டத்தின் படி இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர். இது மத்திய அரசு செய்யும் ஒன் சைடு கேம். என்ன தான் நடக்கிறது இந்த நாட்டில். ஒரு நாடாளுமன்ற தேர்தலை நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தினால் 2 வருடம் ஆகும் 543 இடங்களுக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தும் ஆணையம் எப்படி ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவீர்கள். ஜாமீன் கொடுக்காமல் வழக்கு நடத்தாமல் ஒரு அமைச்சரை 1 வருடம் சிறையில் வைத்திருக்கின்றனர். அதேபோல டெல்லியிலும் அமைச்சர்களை சிறை வைத்துள்ளனர். அன்றைக்கு சர்வாதிகார பிரிட்டீஸ் மன்னர் லண்டனில் இருந்தார். இன்று டெல்லியில் உள்ளார்.
இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Election 2024: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலைக்கு கச்சத்தீவு குறித்து இப்போது தான் தெரியுமா? - செல்லூர் ராஜூ கேள்வி
மேலும் படிக்கவும்





















