மேலும் அறிய

சொந்த பிரச்னைக்கு கூட பேச மாட்டாரு.. முதலமைச்சருன்னு சொல்றாரு.. விஜயை அட்டாக் செய்த கீதா ஜீவன்!

தமிழ்நாட்டிற்கு பாஜக எவ்வளவோ நெருக்கடி கொடுக்கிறது. அதைப்பற்றி ஒரு வார்த்தை விஜய் கேட்கவில்லை. அவ்வளவு பயம் அவருக்கு இருக்கிறது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சொந்த பிரச்னைக்கு கூட குரல் கொடுக்காதவர் விஜய் என தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார். 

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பூபாலராயபுரம் பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில்  அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “நான் 1996ல் அரசியலுக்கு வந்தேன். வரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் 30 ஆண்டுகள் முடிவடைகிறது. திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் கட்சி தொடங்கி ஒரு வருடத்திலேயே நான் தான் முதலமைச்சர் என சிலர் வருகிறார்கள். ஆனால் பாஜகவின் பெயரை சொல்லவே பயந்து சாகிறார்கள்.

தன்னைப் பார்க்க வந்து இறந்த 41 பேரின் வீட்டுக்கு சென்று கூட விஜய் ஆறுதல் சொல்லவில்லை. இது புது கலாச்சாரம் போல இருக்கிறது. விஜய் பெண் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். இவரின் மனைவி, பிள்ளைகளுக்கு கூட பாதுகாப்பு வழங்கவில்லை. தன்னுடைய பிரச்னைக்கு கூட விஜய் குரல் கொடுக்கவில்லை. தான் நடித்த ஜனநாயகன் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுக்கே குரல் கொடுக்காத விஜய் என்ன ஜனநாயக ஆட்சி நடத்தப் போகிறார் என்பது தெரியவில்லை என அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு பாஜக எவ்வளவோ நெருக்கடி கொடுக்கிறது. அதைப்பற்றி ஒரு வார்த்தை விஜய் கேட்கவில்லை. அவ்வளவு பயம் அவருக்கு இருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தொடங்கி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வரை பல கட்சிகள் நூற்றாண்டை கடந்த கட்சிகள். காலம் காலமாக மக்கள் நலன் பெறனும், உரிமைகள் பெறவும், நலத்திட்டங்களை அனுபவிக்க வேண்டும் என திட்டம்போட்டு செயல்படும் கட்சிகள். 

ஆனால் இன்றைக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் நம்மையெல்லாம் இழித்து பேசுகிறது. நான் தான் முதலமைச்சர் என தனக்கு தானே விஜய் பேசிக்கொண்டிருக்கிறார். மதச்சார்பற்ற கூட்டணி அப்படி கிடையாது. திமுக ஒரு விஷயம் செய்யவில்லை என்றால் கூட்டணி கட்சியினரே வந்து கேட்பார்கள். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் மக்கள் நலன் விரும்பிகளாக உள்ளனர். கொரோனா,பெருவெள்ளம் என எதுவாக இருந்தாலும் சரி மக்களுக்காக களத்தில் இருக்கிறோம். எனவே யார் வந்தாலும் சரியான பதிலடி கொடுக்க  மக்களாகிய நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என கீதா ஜீவன் பேசினார்.

தலைப்பு செய்திகள்

Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Embed widget