மேலும் அறிய

மயிலாடுதுறை பரபரப்பு: ராமதாஸ் அணி வேட்பாளர் மனு தள்ளுபடி - அதிமுக, பாமக தரப்பு உற்சாகம்!

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனையின் போது ஏற்பட்ட திடீர் திருப்பமாக, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளர் பாக்கம் சக்திவேலின் மனு நிராகரிக்கப்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு பரிசீலனையின் போது ஏற்பட்ட திடீர் திருப்பமாக, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழக வேட்பாளர் பாக்கம் சக்திவேலின் மனு நிராகரிக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த முடிவால் அந்த அணியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், இது தங்களுக்கு சாதகமாக அமையும் என அதிமுக மற்றும் பாமக கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குவிந்த வேட்புமனுக்கள்: விறுவிறுப்பான பரிசீலனை

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 33 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் நேகா சர்மா முன்னிலையில் இந்த நடைமுறைகள் மிகவும் பாதுகாப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

பரிசீலனையின் தொடக்கத்தில், முக்கிய கட்சிகளின் வேட்புமனுக்கள் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டன. இதில்,

* திமுக கூட்டணி (காங்கிரஸ்) ஜமால் முகமது யூனூஸ்

*அதிமுக கூட்டணி (பாமக) சித்தமல்லி பழனிச்சாமி

* நாம் தமிழர் கட்சி காசிராமன்

* தமிழக வெற்றிக் கழகம் ஹாரூன் ரசீது

உள்ளிட்ட 26 வேட்பாளர்களின் மனுக்கள் முறையாக இருந்ததால் அவை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டது.

பாக்கம் சக்திவேல் மனு நிராகரிப்பு: பின்னணி என்ன?

வேட்புமனு பரிசீலனையின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மருத்துவர் ராமதாஸின் புதிய கட்சியான அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகத்தின் வேட்பாளர் பாக்கம் சக்திவேல் மற்றும் அவரது மனைவியும் மாற்று வேட்பாளருமான சுகுணா சக்திவேல் ஆகிய இருவரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

காரணம்

அவர்கள் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் (Affidavit) சில பிழைகள் இருந்ததாகவும், அந்தத் திருத்தங்களைச் செய்து காலை 11 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்குள் திருத்தப்பட்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், சட்ட விதிகளின்படி மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.

அதிகாரிகள் மீது வேட்பாளர் சரமாரி குற்றச்சாட்டு

மனு நிராகரிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்கம் சக்திவேல், செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

"நாங்கள் காலை 10 மணியிலிருந்தே திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரங்களுடன் அலுவலகத்தின் வாசலில் தான் அமர்ந்திருந்தோம். அதிகாரிகளிடம் ஆவணங்களை நீட்டியபோது, 'இப்போதைக்கு நீங்களே வைத்திருங்கள், நாங்கள் கூப்பிடும்போது வந்து தாருங்கள், பெற்றுக் கொள்கிறோம்' என்று கூறி எங்களைக் காக்க வைத்தனர். ஆனால், நேரம் முடிந்த பிறகு வேண்டுமென்றே எங்கள் மனுவை நிராகரித்துள்ளனர்," என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இருப்பினும், நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, தேர்தல் அதிகாரிகள் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், பாக்கம் சக்திவேல் மற்றும் சுகுணா ஆகியோரது மனுக்கள் அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கப்பட்டன.

தேர்தல் களத்தில் ஏற்படும் தாக்கம்: பாமக நிம்மதி

பாக்கம் சக்திவேல் போட்டியிடுவது பாமகவின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, வன்னியர் சமூக வாக்குகளையும், பாமக தொண்டர்களின் ஒரு பகுதி வாக்குகளையும் அவர் பிரிப்பார் எனக் கணிக்கப்பட்டது.

தற்போது அவரது மனு நிராகரிக்கப்பட்டு, அவர் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதால், அந்த வாக்குகள் சிதறாமல் நேரடியாக அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் சித்தமல்லி பழனிச்சாமிக்கே கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கூட்டணியினர் மகிழ்ச்சி

இந்த அறிவிப்பு வெளியானவுடன், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே இருந்த அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள் இனி எங்கும் பிரியாது என்பதால், வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தேர்தல் களம் காணத் தயாராக இருந்த பாக்கம் சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த சோகத்துடன் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். 33 மனுக்களில் ஏற்பட்ட இந்த முக்கிய மாற்றம், மயிலாடுதுறை தொகுதி தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
காத்திருந்த நிறைமாத கர்ப்பிணி; மேடையில் இருந்து இறங்கிவந்த சிஎம் விஜய்; உடன் ஓடிய அதிகாரிகள்
Gold and silver rate today : உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
உடனே கிளம்புங்க.. தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்- ஒரே நாளில் இவ்வளவு குறைவா.!! விலை நிலவரம் இதோ...
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
TNPSC Group 1: ஏமாற்றிய டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு: காலியிடங்களை 100 ஆக உயர்த்த கோரிக்கை
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
MDMK: திமுக-வை கழுவி கழுவி ஊற்றிய துரை வைகோ! என்னெல்லாம் சொன்னார் தெரியுமா?
TN Heavy rain warning : வெளுக்கப்போகுது கன மழை.! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு குறி- வானிலை மையம் அலர்ட்
இன்று பொத்துக்கிட்டு ஊத்தப்போகது வானம்.! இன்று எங்கெல்லாம் மழை.? வானிலை மையம் அலர்ட்
Jayakumar vs CM Vijay : Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
Reels அ விட்டுட்டு Reality க்கு வாங்க.! சிஎம் விஜய்க்கு வகுப்பெடுத்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?
Vijaya Baskar : எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
எம்எல்ஏ பதவியும் போச்சு.. கட்சியும் போச்சு.. பரிதாப நிலையில் விஜயபாஸ்கர்.? கை விட்டாரா விஜய்.??
Embed widget