மேலும் அறிய

உங்களுக்கு மீண்டும் ஓட்டுப் போடும் அளவிற்கு நீங்கள் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லையே - கொந்தளித்த மக்கள்..!

பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகனை பொதுமக்கள் முற்றுகையிட்டு 'ஓட்டுப் போடும் அளவிற்கு நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை' என பெண்கள் ஆக்ரோஷமாக வாதிட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கு தொகுதிக்குள் கடும் எதிர்ப்பு அலை வீசி வருகிறது. குறிப்பாக, தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான நிவேதா முருகன், வாக்கு சேகரிக்கச் சென்ற இடங்களில் பொதுமக்களின் அடுக்கடுக்கான கேள்விகளால் திணறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழுவூர் பகுதியில் வலுத்த மக்கள் கோபம்

நேற்று இரவு பூம்புகார் தொகுதிக்குட்பட்ட வழுவூர் கிராமத்தில் திமுக வேட்பாளர் நிவேதா முருகன், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், வேட்பாளரின் வாகனத்தை வழிமறித்து முற்றுகையிட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களுக்குத் தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சட்டமன்ற உறுப்பினர் செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டி, பெண்கள் திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.

"எந்த முகத்தோடு வந்தீர்கள்?" – பெண்களின் ஆக்ரோஷம்

பொதுமக்களின் போராட்டத்தைக் கண்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்த நிவேதா முருகனிடம், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பேசியது அங்கிருந்தவர்களை அதிர வைத்தது. "ஐந்து வருஷமா இந்தப் பக்கம் தலைகாட்டல. குடிதண்ணீருக்கு வழியில்லை, சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. இப்போது தேர்தல் வந்தவுடன் மட்டும் ஓட்டு கேட்டு வருகிறீர்களே? உங்களுக்கு மீண்டும் ஓட்டுப் போடும் அளவிற்கு நீங்கள் இந்த தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லையே! அப்புறம் எதற்காக எங்களிடம் வருகிறீர்கள்?" என்று அந்தப் பெண் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த பிற பெண்களும் ஆமோதித்து கோஷமிட்டதால், திமுக நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்தனர்.

பூம்புகார் சட்டமன்ற தொகுதி - சிட்டிங் எம்எல்ஏ முற்றுகை..! pic.twitter.com/DaFgf8pPhy

— JAGANNATHAN (@Jaganathan_JPM) April 19, 2026

">

பதில் சொல்ல முடியாமல் பின்வாங்கிய வேட்பாளர்

மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வேட்பாளர் நிவேதா முருகன் மற்றும் அவருடன் வந்த திமுக நிர்வாகிகள் மௌனம் காத்தனர். நிலைமை மோசமாவதைக் உணர்ந்த வேட்பாளர், மேற்கொண்டு வாக்குவாதம் செய்யாமல் அங்கிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார். மக்களின் இந்த திடீர் எதிர்ப்பால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு , கட்சித் தொண்டர்களிடையே ஒருவித தொய்வு நிலையை ஏற்படுத்தியது.

தொடரும் எதிர்ப்பு அலைகள்: பின்னணி என்ன?

பூம்புகார் தொகுதியில் நிவேதா முருகன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, கட்சிக்குள்ளும், வெளியிலும் பல்வேறு அதிருப்திகள் நிலவி வருகின்றன.

அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு: தொகுதியின் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி மற்றும் முறையான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாதது, மக்களின் முக்கிய புகாராக உள்ளது.

தொடர்பு இன்மை: எம்.எல்.ஏ-வை அணுகுவது கடினமாக இருப்பதாகவும், உள்ளூர் பிரச்சனைகளை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் பொதுமக்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.

உட்கட்சி பூசல்: வேட்பாளர் தேர்வில் நிலவும் அதிருப்தி காரணமாக, சில பகுதிகளில் திமுக நிர்வாகிகளே பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு?

இது முதல்முறை அல்ல திமுக வேட்பாளர் நிவேதா முருகன் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நாள் முதல் தொகுதியில் பல்வேறு இடங்களிலும் வாக்கு சேகரிக்கச் செல்லும் இடமெல்லாம் திமுக வேட்பாளருக்கு எதிராக மக்கள் 'லெப்ட் ரைட்' வாங்கி வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. வழுவூர் சம்பவம் மட்டும் ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல, மாறாக தொகுதி முழுவதும் நிலவும் அதிருப்தியின் வெளிப்பாடாகவே இது பார்க்கப்படுகிறது. "மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மக்கள் பிரதிநிதிகளுக்கு, தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் பாடம் புகட்டுவது ஜனநாயகத்தின் வலிமையைக் காட்டுகிறது. பூம்புகார் தொகுதியில் தற்போது வீசும் இந்த எதிர்ப்பு அலை, ஆளுங்கட்சிக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணி," என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பூம்புகார் தொகுதியில் நிலவும் இந்தத் தொடர் அதிருப்தி அலைகளால், திமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் பூம்புகார் தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Embed widget