மேலும் அறிய

Lok Sabha Election: கேட்டது கிடைத்தது! பானை சின்னத்தில் களமிறங்கும் திருமாவளவன் - உற்சாகத்தில் விசிக!

மக்களவை தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

மக்களவை தேர்தல்:

உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது.  இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு தேர்தலையும் சந்திக்கிறது. குறிப்பாக, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகின்றனர்.

கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் ரவிக்குமார்  விழுப்புரத்திலும் போட்டியிடுகின்றனர்.   தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக இரண்டு பேரும் பானை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்து, நாடாளுமன்ற தேர்தலில் பொது சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்கக்  கோரி தேர்தல் ஆணையத்திடம் விசிக மனு அளித்தது. 

இதற்கு கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் குறைந்தபட்சம் 1 சதவீதத்திற்கு குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க முடியாது என்று விசிகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது. 

விசிகவிற்கு பானை சின்னம் ஒதுக்கீடு:

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில்  1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத ஓட்டுகள் பெற்றதாகக் கூறி, தங்களுக்கே பானை சின்னம் வழங்க வேண்டும் என விசிக வழக்கு தொடர்ந்தனர். பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன், கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அதை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்தது.

இன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாக கட்சியினர் கவலையுடன் இருந்தனர். ஆனாலும், விசிக வேட்பாளர்கள் நிச்சயமாக பானை சின்னத்தில் தான் போட்டியிடுவர் என்று பேட்டியளித்த திருமாவளவன், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் லோக்சபா தொகுதிகளில், நேற்று வரை பானையை காட்டி ஓட்டு கேட்டார்.

இந்த நிலையில் தான், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிகவிற்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். பானை சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார் திருமாவளவன்.

மேலும் படிக்க

Lok Sabha Election: ”வத்திகுச்சி பத்திக்குமா” மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget