Lok Sabha Election 2024: விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் விசிக வேட்பாளர் ரவிக்குமார் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாட்டில் போட்டியில் 39 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற பாடுபடுவோம்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் அமைச்சர் பொன்முடியுடன் வந்து தாக்கல் செய்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். கடந்த இருபதாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் 27ஆம் தேதி கடைசி நாள். இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார். அமைச்சர் பொன்முடி, கூட்டணி கட்சியினர் ஆகியோர் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்பமனுவை தாக்கல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சியின் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ரவிக்குமார் மீண்டும் இரண்டாவது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த தொகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐந்தாம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விழுப்புரம் தொகுதிக்கு வர உள்ளார். இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இந்த பிரச்சாரங்களின் மூலமாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ரவிக்குமார் வெற்றி பெறுவார். அதனைத் தொடர்ந்து செய்து அவர்களிடம் பேசிய ரவிக்குமார், இந்த கூட்டணியை வழி நடத்தும் கட்சியான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள் தமிழ்நாட்டில் போட்டியில் 39 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற பாடுபடுவோம் என தெரிவித்தார்.