மேலும் அறிய

Lok sabha Election 2024: தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவு! ஓட்டுப் போடுவதில் மாஸ் காட்டிய கள்ளக்குறிச்சி!

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 7 மணி நேர நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.  கடந்த மக்களவைத் தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாகியுள்ளது. மாலை 3 மணிக்கு மேல் அதிகமானோர் அதிகளவில் வாக்களிக்க வந்தனர். 

வாக்குப்பதிவு:

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 75.67 சதவீதமும், தருமபுரியில் 75.44 சதவீதமும், சிதம்பரமும் 74.87 தவீதமும் வாக்குப்பதிவு செய்யப்படுகிறது. 70 சதவீதத்திற்கு மேல் கள்ளக்குறிச்சி, தருமபுரி, சிதம்பரம், பெரம்பலூர், நாமக்கல், கரூர், அரக்கோணம், ஆரணி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கடலூர், விருதுநகர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், திருப்பூர், திருவள்ளூர், தேனி, மயிலாடுதுறை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி,  தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பதிவாகியுள்ளது. 

பலத்த பாதுகாப்பில் வாக்கு இயந்திரங்கள்:

7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டிலே குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளது. 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க டோக்கன் விநியோகிக்கப்பட்டதால், அவர்கள் மட்டும் 6 மணிக்கு பிறகும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சரியாக 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற இடங்களில், வாக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டது. 

வாக்கு எண்ணும் இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் உள்ள பூத் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீலிடப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீலிடப்பட்டது. அந்த அறைகளின் முன்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற வெளியூர்களில் வசித்து வந்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் வாக்களிப்பதற்காக இரண்டரை லட்சம் மக்கள் புறப்பட்டுச் சென்றனர். 

தலைப்பு செய்திகள்

TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Embed widget