முதல்வர் போல் மிமிகிக்ரி செய்து அதிமுகவுக்கு பரப்புரை செய்த பேச்சாளர் - தேனியில் சுவாரசியம்
மு.க.ஸ்டாலின் போல் மிமிக்கிரி செய்து பேசி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைமைக் கழக பேச்சாளர் காளிதாஸ்.
நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தபின்பு, அந்தந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தபின் தங்களது பகுதிகளில் வாக்குகளை சேகரிக்க தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நட்சத்திர தொகுதியான தேனி மாவட்டத்திலும் வேட்பாளர்கள் தங்களது அனல் பறக்க பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போல் மிமிக்கிரி செய்து பேசி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைமைக் கழக பேச்சாளர் காளிதாஸ். பரப்புரையின்போது முதலமைச்சரை வசைப்பாடி அதிமுக திட்டங்களை நிறுத்தியதாக குறை கூறி பரப்புரை செய்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் கோவை காளிதாஸ் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரையின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்ளை கூறியதோடு ஜெயலலிதா மறைவிற்கு பின் திட்டங்களை எடப்பாடி பழனிசசாமி முதல்வராக தொடர்ந்தார் என்றும் அதன் பின்பு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அத்திட்டங்களை அனைத்தையும் முடக்கியதாக ஸ்டாலின் போல் மிமிக்கிரி பண்ணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழ் கற்றுக்கோங்க மோடி; முதல்வரிடம் சொல்லி நல்ல ஆசிரியரை அனுப்புகிறோம் - கனிமொழி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தற்போதைய முதல்வராக இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடக்கியதாக கூறி முதல்வரை வசை பாடி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை கூறி சொன்னார் செய்தார் மறைந்தார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதைத்தொடர்ந்து செய்தார் என அடுக்கு மொழிகளில் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் அரசு ஊழியர்களுக்கு தான் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறிவிட்டு மூன்றாண்டுகளாக அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்றத் தேர்தலில் எப்படி வாக்கு கேட்டு வருகிறார் என கேள்வி எழுப்பி பரப்புரை மேற்கொண்டார்.