மேலும் அறிய

Lok Sabha Elections 2024 TN: தொகுதிப் பங்கீடு ஓவர் - இவங்க 3 பேர் மட்டும் வேணாம்! - காங்கிரஸ்க்கு லிஸ்ட் போட்ட திமுக?

Lok Sabha Elections 2024 TN: காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாற்றினால், அவர்கள் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lok Sabha Elections 2024 TN: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், இன்றோ அல்லது நாளையோ இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

களைகட்டும் மக்களவைத் தேர்தல் 2024: 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால், ஏற்கனவே அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. இதனால், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் கட்டமைத்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. இதையடுத்து எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 

திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு:

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. விசிகவிற்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுபோக,  காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான தொகுதி விவரங்கள் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

வேட்பாளர்களை மாற்றுமா காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போதும், திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதன்படி, திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறையும் இதே தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கரூர், திருச்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க, திமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

3 எம்பிகளுக்கு ”நோ” சொல்லும் திமுக:

கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதி மணியும், திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசும், திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமாரும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு இவர்கள் திமுகவினருக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை எனவும், தொகுதியிலும் பெரியதாக பணி செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.  இதன் காரணமாக ஜோதிமணி, திருநாவுக்கரசர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு பதிலாக, அந்த தொகுதிகளில் மாற்று வேட்பாளர்களை அறிவிக்க திமுக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அதேநேரம், ஜோதிமணி மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர், காங்கிரசில் முக்கிய மற்றும் பிரபலமானவர்களாக உள்ளனர். அதோடு, ராகுல் காந்திக்கும் நெருக்கமானவர்கள் என்பதால், அவர்களுக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்படலாம் என காங்கிரஸ்  தரப்பு தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Inga Naan Thaan Kingu Review: காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
காமெடி ஜொலிக்கிறதா? சோதிக்கிறதா?  - சந்தானத்தின் “இங்க நான் தான் கிங்கு” விமர்சனம் இதோ!
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
TN Rain: குடையுடன் போங்க! அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம்?
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
Vaikasi: கல்யாணம் பண்ணப் போறீங்களா! வைகாசியில் எத்தனை முகூர்த்த நாட்கள்? முழு விவரம்
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
குடிபோதையில் நடந்த தகராறு: நண்பனை கொலை செய்து விட்டு நாடகமாடியவர் கைது! சிக்கியது எப்படி?
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
சென்னை விமானநிலையத்தில் கொத்தாக மாட்டிய கும்பல்! சிக்கிய போதை பொருள்! ரூ.22 கோடி மதிப்பாம்!
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
மோடிக்கு வயசாயிடுச்சி; அதனால் அவர் அப்படி பேசலாம்! - சபாநாயகர் அப்பாவு
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
சிறுவர்களை மிரட்டி பாலியல் சீண்டல்: போலீஸ் பிடிக்க சென்றபோது தப்பிக்க முயற்சித்த வாலிபருக்கு கால்முறிவு!
Embed widget