Lok Sabha Election 2024: திருவண்ணாமலையில் எந்தெந்த கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்
Lok Sabha Election 2024: திருவண்ணாமலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர் வேட்பாளர்கள் அடுத்தடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த இருபதாம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று திமுக மற்றும் அதிமுகவினர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக போட்டியிடும் அதிமுகவை சேர்ந்த கலியபெருமாள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை புரியும்போது, அவருடன் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது வேட்பு மனுக்களை அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் சி என் அண்ணாதுரை மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது வேட்பு மனுக்களை அளித்தனர். இதேபோல் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் ரமேஷ் பாபு அவருடைய கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது வேட்பு மனுக்களை அளித்தனர். மேலும் மக்கள் புரட்சி கழகம் சார்பில் கோதண்டபாணி மற்றும் சுயேட்சியாக பூகோடி, உதயகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது வேட்பு மனுக்களை அளித்தனர். திமுக, அதிமுக என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.