![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM MK Stalin: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்; தயாரான பிரம்மாண்ட மேடை! குவியும் தொண்டர்கள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்
![CM MK Stalin: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்; தயாரான பிரம்மாண்ட மேடை! குவியும் தொண்டர்கள் Lok Sabha Election 2024 cm mk stalin election campaign will be held on today in villupuram CM MK Stalin: விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம்; தயாரான பிரம்மாண்ட மேடை! குவியும் தொண்டர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/05/f41fd1fe30581b6fb892177d228ca7f61712290596283572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம், கடலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் உள்ள மைதானத்தில் இன்று திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்தும், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்தும் வாக்கு சேகரிக்க உள்ளார்.
இந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் பொன்முடி, கே.எஸ்.மஸ்தான், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சார வேன் மூலம் இன்று மாலை 3மணியளவில் விழுப்புரம் செல்கிறார். அங்கு அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்திற்காக பிரம்மாண்ட மேடையும் போடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)