மேலும் அறிய

Local Body Elections 2022 | ’மோடி ஜெயிப்பதற்கா நான் அரசியலுக்கு வந்தேன்?’ - கொதித்த கமல்ஹாசன்..

"என்னை பார்த்து அடிக்கடி கமல்ஹாசனுக்கு ஓட்டு போட்டுறாதீங்க, மோடி ஜெயித்து விடுவார்கள் என அசட்டுதனமானவும், குழந்தைத்தனமாகவும் சொல்கிறார்கள். மோடி ஜெயிக்காகவா நான் இங்கு வேலைக்கு வந்தேன்?"

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்த கொண்டார். இதன் பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”9 மாத திமுக ஆட்சியில் இதுவரை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் 2 கழகங்களும் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் குப்பை போல் வீசி விடுகிறார்கள். ஊழலுக்கும் ஊழலுக்கும் தான் தற்போது போட்டி. மக்கள் சார்பு நிலையை எடுக்க கூடாது எனவும் மய்யமாக இருக்க வேண்டும். இது மக்களுக்கு சொல்லும் அறிவுரை அல்ல எனவும் தனக்கும் தனது கட்சியினருக்குமான அறிவுரையாகவே பார்க்கிறேன். 

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் எங்கு எல்லாம் வெற்றி பெறுகிறார்களோ, அங்கெல்லாம் நேர்மை கோட்டைக்கான அஸ்திவாரம். என்னை பார்த்து அடிக்கடி கமல்ஹாசனுக்கு ஓட்டு போட்டுறாதீங்க, மோடி ஜெயித்து விடுவார்கள் என அசட்டுதனமானவும், குழந்தை தனமாகவும் சொல்கிறார்கள். மோடி ஜெயிக்காகவா நான் இங்கு வேலைக்கு வந்தேன்? மோடி வென்றாலும் தோற்றாலும் எனக்கு கவலையில்லை. தமிழகம் ஜெயிக்க வேண்டு என்பது தான் எனது ஆசை. அவர் ஜெயிக்க பல யுக்திகளை வைத்துள்லார். அந்த யுக்திகள் பழிக்கக் கூடாது என்பது தான் எனது ஆசை. என்னை பி டீம், பி டீம் என்றார்கள். அது எடுபடாததால் இப்படி வீடு, வீடாக சொல்கிறார்கள். மோடி எப்படி கவுன்சிலராக வருவார்?

Local Body Elections 2022 | ’மோடி ஜெயிப்பதற்கா நான் அரசியலுக்கு வந்தேன்?’ - கொதித்த கமல்ஹாசன்..

தங்கள் கட்சியினர் வென்றால் கிராம சபை கூட்டங்களை போல், நகரங்களில் வார்டு சபை, ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப்படும் என உறுதிமொழி கொடுத்து தங்கள் வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். நீட்டை ஒழிப்பேன் என்றவர்கள் நீட்டிற்கு வகுப்பு நடத்துவேன் என பிரச்சாரம் செய்கிறார்கள். நியாயமான தேர்தல் இதுவரை நடைபெற்றுள்ளது என நினைக்கிறீர்களா?

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மேயராவது தனது நோக்கமல்ல. நான் தலைவராக மட்டுமே இருப்பேன். ஹிஜாப் விவகாரத்திற்கு பின்னர் ஒரே ஒரு கட்சி மட்டுமே இருக்கிறது. பிற கட்சிகள் அதை பிரச்னையாக பார்க்க மாட்டார்கள். ஹிஜாப் அணிவதற்கும், திருநீறு வைப்பதற்கும், கடவுள் இல்லை என்று சொல்வதற்கும் இந்த நாட்டில் உரிமையுண்டு. எனது நாத்திகம் கிண்டல் அடிக்கப்படக்கூடாது. ஆத்திகமும் கிண்டல் அடிக்கப்படக்கூடாது. கோவையில் பல இடங்களுக்கு தேர்தலுக்கு பின்னர் மநீம கட்சியினர் சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அங்கு தங்களின் கால்தடம் பதிந்து வருகின்றனர்” என அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நகர்ப்புற தேர்தலில் மநீமவிற்கு கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டிற்கும் 5 ஆண்டுகளில் ஒரு மரக்கன்று வழங்கப்படும் என்ற திட்டத்தை துவக்கி வைத்து நந்தினி என்ற கர்ப்பிணிக்கு மரக்கன்று வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget