Local body elections | தஞ்சை மாவட்டத்தில் 459 பதவிக்கு 1475 பேர் வேட்பு மனு தாக்கல்
வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை பெரும்பாலானோர், திமுக, அதிமுகவில் சீட் வழங்கப்படாததால், அக்கட்சியை சேர்ந்தவர்களை தோக்கடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேட்பு மனு தாக்கல்
தாரை தப்பட்டை அடிக்கும் போது, குத்து பாட்டுக்கு அடித்ததால், சத்தத்தை கேட்ட மூதாட்டி ஒருவர் திடிரென ஆண்களுக்கு நிகராக குத்தாட்டம் போட்டார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் தேதியுடன் முடிவடைகிறது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 459 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகின்றது. அதனை முன்னிட்டு 3 ஆம் தேதி தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 167 பேரும், கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 197 பேரும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவிக்கு 114 பேரும், அதிராம்பட்டிணம் நகராட்யில் 27 வார்டு உறுப்பினர் பதவிக்கு 63 பேரும், 20 பேரூராட்களில் 300 வார்டு உறுப்பினர் பதவிக்கு 698 பேரும் என இதுவரை மொத்தம் 459 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 1475 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் காலை முதல் பல்வேறு கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர். இதில் அதிமுகவை சேர்ந்த வேட்பாளர், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் நுாற்றுக்கும் மேற்பட்டவருடன் ஆற்றுப்பாலத்திலிருந்து தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்தின் முன் வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அமைதி படுத்தி ஒரமாக அனுப்பி வைத்தார். ஆனாலும் உற்சாகமாக இருந்த தொண்டர்கள், மீண்டும் சாலையின் நடுவில் வந்ததால், வேறு வழியில்லாமல் போலீசார் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டனர்.
அப்போது, தாரை தப்பட்டை அடிக்கும் போது, குத்து பாட்டுக்கு அடித்ததால், சத்த்தை கேட்ட மூதாட்டி ஒருவர் திடிரென ஆண்களுக்கு நிகராக குத்தாட்டம் போட்டார். இதனால் உற்சாகமடைந்த தப்பாட்டம் அடித்தவர்கள், மூதாட்டியின் குத்தாட்டதை பார்த்து, சத்தத்தை அதிகபடுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு, கட்சியினர், மூதாட்டியை சமாதானம் செய்து, அமைதி படுத்தி அனுப்பி வைத்தனர். மூதாட்டியின் குத்தாட்டத்தை பார்க்க பொது மக்கள், பல்வேறு கட்சியினர் குவிந்ததால், மேலும் போக்குவரத்து பாதித்தது.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் 51 வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிடும் அஞ்சுகம்பூபதி, நிறைமாக கர்ப்பிணியாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அஞ்சுகம்பூபதி, எம்எல்ஏ வேட்பாளராக திமுகவில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர், இதே போல் மூன்றாவது முறையாக திமுக வேட்பாளராக 5 வது வார்டில் போட்டியிடும் ரேவதிகார்த்திகேயன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தஞ்சை மாநகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை பெரும்பாலானோர், திமுக, அதிமுகவில் சீட் வழங்கப்படாததால், அக்கட்சியை சேர்ந்தவர்களை தோக்கடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.