(Source: ECI/ABP News/ABP Majha)
10 ரூபாய் நாணயங்களை கொண்டே டெபாசிட் தொகையை கட்டிய கரூர் மக்கள் நீதி மய்ய பெண் வேட்பாளர்
10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் யாரும் வாங்க மறுப்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெபாசிட் தொகையை செலுத்தியதாக மக்கள் நீதி மய்ய வேட்பாளர் உமா மகேஸ்வரி கருத்து
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள கரூர் முதல் முறையாக மேயர் தேர்தலை சந்திக்கிறது. அதிலும், கரூர் மாநகராட்சி பெண் பெயர் என்பதால் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக தேர்தல் என்றாலே கரூரில் கலகலப்பாக காட்சியளிக்கும். இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடும் இழுபறி நிலையில் மீண்டும் மாநகராட்சியில் 3-வார்டு ஒதுக்கப்பட்டு திமுக தலைமை திடீர் அறிவிப்பால் காங்கிரஸ் தலைமை எந்த சத்தமும் போடாமல் அந்த மூன்று வார்டுயும் பெற்றுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து அதிமுக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து விரிசல் ஏற்பட்டு தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என மாநிலத் தலைவர் திடீர் அறிவித்தார். இதனை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கரூர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை திடீரென உற்சாகமடைந்து. 48-வார்டு மாநகராட்சி தேர்தலில் முதலில் 37-வார்டு பகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தது. 45 வார்டுகளில் தற்போது போட்டியிடுகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக நடிகர் கமலஹாசன் அவர்களின் இயக்கமான மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் மாநகராட்சி தேர்தலில் அதிகளவில் போட்டியிடுகின்றனர். அதிலும், குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் 12 ஆவது வார்டு பெண் வேட்பாளர் உமா மகேஸ்வரி (42) அவரது கணவர் கண்டன் தச்சு தொழிலாளி. இவர்கள் இருவரும் இணைந்து மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பெண் வேட்பாளர் உமா மகேஸ்வரி மக்கள் நீதி மைய கட்சியின் சால்வை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த நிலையில் அவரது கணவர் கண்ணன் ஆலோசனை கிணங்க பெண் வேட்பாளர் உமாமகேஸ்வரி திடீரென தன் கையிலிருந்த பத்து ரூபாய் காயின், ரூபாய் ஆயிரத்தை எடுத்து வேட்பாளர்கள் டெபாசிட் கட்டும் இடத்திற்குச் சென்றார்.
இதற்கு விளக்கம் கேட்ட செய்தியாளர்களிடம் மக்கள் நீதி மைய கட்சியின் 12வது வார்டு பெண் வேட்பாளர் உமா மகேஸ்வரி பேசுகையில் பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் காயினை வாங்குவதில்லை. இந்நிலையில் நான் தேர்தலில் வெற்றி பெற்று எனது வார்டு உள்ளிட்ட மாநகராட்சி அனைத்து பகுதிகளுக்கும் பத்து ரூபாய் காயின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இதற்காக பிரத்யேகமாக சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையில், தற்போது அதற்கு முன் உதாரணமாக என்னிடம் இருந்த பத்து ரூபாய் காயின் ரூபாய் ஆயிரத்தை டெபாசிட் தொகைக்கு இந்த தொகையை வழங்கி உள்ளார். ஆகவே, இந்த விழிப்புணர்வுகளுடன் பிரச்சாரம் தொடங்கும் என மக்கள் நீதி மைய கட்சியின் 12வது வார்டு பெண் வேட்பாளர் தெரிவித்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்