Kanniyakumari Election Results 2024: கன்னியாகுமரி தொகுதி - மீண்டும் விஜய் வசந்த்- வெற்றி உறுதி!
Kanniyakumari Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பியான விஜய் வசந்த் -
அதிமுக சார்பில் பசிலியான் நசரேத் - 35,868
பாஜக சார்பில் முன்னாள் எம்.பி ஆன பொன். ராதாகிருஷ்ணன் - 3,28,078
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன. அதன்படி, கன்னியாகுமரியில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்களும் & வேட்பாளர்களும்
ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம், 15 லட்சத்து 57 ஆயிரத்து 915 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பியான விஜய் வசந்த், அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், பாஜக சார்பில் முன்னாள் எம்.பி ஆன பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிஃபர் அகியோர் போட்டியிட்டுள்ளனர்.
பதிவான வாக்குகள் விவரம்:
தேர்தல் ஆணைய தரவுகளின்படி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில் 15 லட்சத்து 57 ஆயிரத்து 915 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில், கன்னியாகுமரியில் 65.44 சதவிகிதம் மட்டுமே அதாவது 10 லட்சத்து 19 ஆயிரத்து 532 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதன்படி, ஆண் வாக்களர்களில் 62.86 சதவிகிதம் பேரும், பெண் வாக்காளர்களில் 68.02 சதவிகிதம் பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 29.37 சதவிகிதமும் பேரும் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
கடந்த தேர்தல் விவரம்:
2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார், உயிரிழந்ததால் 2021ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அதன் முடிவில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளையும், அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளையும் பெற்றனர். இதனால், விஜய் வசந்த் 1,37,050 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?
நலிவடைந்து வரும் ரப்பர் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என்பது, கன்னியாகுமரி மக்களவை தொகுதி மக்களின் பிரதான பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. நீராதாரங்களைக் கோடைகாலத்துக்குத் தட்டுப்பாடின்றி விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் மேல்நோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்படாதது பெரும் குறையாகவே உள்ளது. தென்னை சார்ந்த சிறு தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. செயற்கை ரப்பர் இறக்குமதி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளத்தின் நெய்யாறு இடதுகரைக் கால்வாய் மூலம் குமரி எல்லைப் பகுதிகளுக்குப் பாசன நீர் வழங்கும் திட்டம், தென்னைசார் தொழிற்சாலை, தோவாளையில் மலர் நறுமணத் தொழிற்சாலை போன்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த பிரதான கோரிக்கைகளை வெற்றி பெற்ற வேட்பாளர் நிறைவேற்றுவாரா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.