மேலும் அறிய
ஊழல் செஞ்சா பா.ஜ.க வாஷிங் மெஷினில் சுத்தமாகிடலாம்! - திருச்சியில் கனிமொழி எம்.பி. அதிரடி !
2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவச கைப்பேசி வழங்கப்படும் என கூறினர், வழங்கினார்களா? இல்லை. அதை அவர்களும் மறந்து விட்டனர், மக்களும் மறந்து விட்டனர்: கனிமொழி கருணாநிதி எம்.பி

திருவரங்கத்தில் கனிமொழி கருணாநிதி பிரசாரம்!
Source : ABP NADU
திருவரங்கம்: திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து சோமரசம்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார். அப்போது அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைராஜியை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் உள்ள சோமரசம்பேட்டை காந்தி சிலை அறுத்தால் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.;
முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைமைச் செயலாளரும் தேர்ந்தெடுத்து உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ள வேட்பாளர் துரைராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொண்டார். கடந்த தேர்தலில், ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்று 1 கோடி 31 லட்சம் சகோதரிகள் தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகையை பெற்றுக் கொண்டு வருகின்றனர்.
தேர்தல் முடிந்து மறுபடியும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். ஆட்சி அமைந்தவுடன், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தற்போது மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன், அது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவர்கள் இன்டர்வியூக்கு செல்லவும், பிற செலவுகளுக்காக பயன்படுத்தவும், படிப்பு முடித்த பின் ஆறு மாதங்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்குவோம் என்று முதலமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.
முதலில், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கியது தலைவர் கலைஞர். இப்போது, எந்தவித மின்மீட்டர் பொருத்தப்படாத புதிய பம்பு செட்டுகள் 20 லட்சம் விவசாயிகளுக்கு மேல் வழங்கப்படும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். நமது அமைச்சர் கே.என்.நேரு மாடுகளை வளர்க்க ஆர்வம் மிகுந்தவர். 24 மணி நேரமும் கால்நடை மருத்துவமனை இயங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்து இருக்கிறார். அதனை நிறைவேற்றுவதாக நமது முதலமைச்சர் இந்தத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் வாஷிங் மெஷின் தான் கொடுக்கப்பட வேண்டும். ஏன் என்றால், பாஜகவிடம் ஒரு பெரிய வாஷிங் மெஷின் வைத்திருப்பார்கள். யார் மீது எந்த வழக்குகள் இருந்தாலும், யார் மீது எந்த குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜகவில் சேர்ந்துவிட்டால், அந்த வாஷிங் மெஷின சுத்தம் செய்து விடும். நாங்கள் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன், 8,000 ரூபாய்க்கு ஒரு கூப்பன் கொடுக்குறோம். அதைக் பயன்படுத்தி உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளலாம். உங்களுக்கு ஃபிரிட்ஜ் வேண்டும் என்றால் ஃபிரிட்ஜ் வாங்கலாம், வாஷிங் மெஷின் வேண்டும் என்றால் வாங்கலாம், கிரைண்டர் வேண்டும் என்றால் அதையும் வாங்கிக்கொள்ளலாம்.
டிவி பழசா போச்சு. பெருசா வேணும். தலைவர் கலைஞர் கொடுத்த TV இன்னும் ஓடுது இல்ல. இப்ப எல்லாம் நாம வாங்குனா TV வாங்கணும். மூணு வருஷத்துல ஓட மாட்டேங்குது. ஆனா தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் உங்களுக்குத் தந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இன்னும் பயன்படுத்தக்கூடிய வகையில இருக்கு. அதனால TV இன்னும் புது TV வேணுமா? அந்த எட்டு ஆயிரம் ரூபாய்க்கு மேல குடுத்து பெரிய TV வாங்கிக்கலாம். அதனால உங்களுக்கு என்ன தேவையோ தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.
தலைவர் கலைஞர் கொடுத்த டிவி இன்றும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இப்போது நீங்கள் புதிய டிவி வாங்க விரும்பினால், 8,000 ரூபாய் கூப்பனுடன் பெரிய TV வாங்கலாம். அதனால் உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம். Choice is yours என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் எது வேண்டுமோ வாங்கி கொள்ளுங்கள்.
அதிமுக தேர்தல் அறிக்கை யாரும் படிக்கிறதே கிடையாது. 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் 27 பக்கத்துல 31வது வாக்குறுதி. என்ன மறந்துருப்பீங்க? இல்லையா? அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும். Cell phone. ஞாபகம் இருக்கா? யாருக்காவது யாராவது cell phone வாங்குனீங்களா? யாருக்காவது கிடைச்சுதா? கிடைக்கல இல்ல. Cell phone cell phone குடுக்குறேன்னாரு. குடுத்தாங்களா? யாரும் வாங்கல. அவங்களும் மறந்துட்டாங்க. நம்மளும் மறந்துட்டோம்.
2016ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் 27 பக்கத்தில், 31வது வாக்குறுதி. அதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி விலையின்றி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஞாபகம் இருக்கிறதா? யாராவது அந்த கைபேசி (cell phone) வாங்கியிருக்கிறீர்களா? யாருக்காவது கிடைத்ததா? கிடைக்கவில்லை. அவர்களும் மறந்துவிட்டனர். நாமும் மறந்துவிட்டோம்.
அதே போல 40வது பக்கத்துல அம்மா Banking card. வங்கிக்கு செல்லும்போது நடத்துற மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் நிதி சேவைகளுக்காக பயன்படுத்துறதுக்காக அம்மா Banking card குடுக்குறேன்னாங்க. ஒரே ஒரு card. அதையாவது குடுத்தாங்களா?இல்லை. அதே போல, 40வது பக்கத்தில் அம்மா Banking Card பற்றிய விபரம் உள்ளது. வங்கியில் ஏழை எளிய மக்களுக்கும் நிதி சேவைகளுக்காக பயன்படுத்தச் செய்ய அம்மா Banking Card வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரே ஒரு கார்டையும் கொடுத்தார்களா? இல்லை.
தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரானவர்கள். இந்த நாட்டில் உள்ள மத நல்லிணக்கத்துக்கும், மக்களுடைய ஒற்றுமைக்கும் எதிரானவர்கள். கோடி கோடியாக ஹிந்திக்கும், சம்சம்கிறதா மொழியையும் தருகிறார்கள். தமிழுக்கு எந்த உதவியும் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் பிள்ளைகள் ஹிந்தி படிக்கவில்லை என்றால், நமது பிள்ளைகளுக்கு வரவேண்டிய நியாயமான கல்வித் தொகையையும் நிறுத்தி வைக்கக்கூடிய ஒன்றிய அரசு. மோடியின் ஆட்சியோடு இணைந்து, எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தலில் நிற்கிறார். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியையும், உரிமைகளையும் வழங்கவில்லை.
மெட்ரோ ரயில் வேண்டும் என்று கேட்டாலும் கிடையாது. எந்தத் திட்டத்தையும் கேட்டாலும் கிடையாது. நிதி கேட்டாலும் கிடையாது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், நிதியையும் எல்லாம் தட்டிப் பறிக்கக்கூடியவர்களோடு இணைந்து, இன்று ஒரு கூட்டணி அமைத்துள்ளனர். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என்று சொன்னார்கள். நம்ம பணத்தை எடுக்க, வங்கியின் முன் நாளெல்லாம் க்யூவில் நின்றோம். அதன் பிறகு, கொரோனா வந்தபோது மருந்து, ஆக்சிஜன் போன்றவற்றிற்கும் க்யூவில் நின்றோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தமிழ்நாட்டில் வந்தபின் எல்லாருக்கும் மருத்துவ வசதிகள் கிடைத்தன. அதற்கு முன்பு வரிசையில் நின்று கஷ்டப்பட்டு கொண்டிருந்தோம். மற்ற மாநிலங்களில், பாஜக ஆட்சியுள்ள மாநிலங்களில், மருத்துவமனை வாசல்களிலும் மக்கள் இருப்பதைப் பார்த்தோம், ஆனால் வழியில்லாமல் க்யூவில், தெருவில் படுத்துக் கிடக்க வேண்டிய நிலை இருந்தது. இன்னைக்கு டீசல், பெட்ரோல் வாங்குவதற்கும் க்யூவில் நின்று காத்திருக்கிறோம்.
அடுத்து LPG cylinder gas cylinderக்கு queueல நிக்கணுமா அப்படிங்கிற பயத்தோடு தவித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பத்தி அங்கிருந்து Delhi ல வர அங்கிருந்து வரக்கூடியவர்கள் வாய் திறப்பதில்லை. இன்னைக்கு commercial cylinders எல்லாம் ஒரு உணவு கடைக்கு வாங்கக்கூடிய cylinder ஆ இருக்கட்டும், தங்கக்கூடிய விடுதிகளுக்கு வாங்கக்கூடிய gas cylinder ஆ இருக்கட்டும் எல்லாத்துக்கும் விலை ஏறிடுச்சு. அவங்களால தாங்கப் பிடிக்க முடியவில்லை. இன்னைக்கும் எல்.பி.ஜி சிலிண்டெற்காக க்யூவில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, டெல்லியில் வரக்கூடியவர்கள் வாயை திறப்பதில்லை. இன்றைக்கு உணவுக் கடைகளுக்கு காமர்ஷியல் சிலிண்டர்கள் கிடைக்கிறதோ? எல்லாவற்றுக்கும் விலை உயர்ந்துவிட்டது.
“‘Make in India’ என்று அடிக்கடி மோடி சொல்லுவார். ஆனால் இந்த எல்.பி.ஜி சிலிண்டருக்கு ‘Make in India’ என்பதே இல்லை. எல்லாமே வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இன்றைக்கு இவ்வளவு பெரிய போர் நடக்கக்கூடிய சூழ்நிலையில், நமக்கு இன்னும் எத்தனை நாள் கேஸ் சிலிண்டர் கிடைக்கும், கிடைக்காதோ என்று தெரியாத நிலையில் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் கேள்வி கேட்க யாரும் தயாராக இல்லை..
எதிரணியில் இருப்பவர்கள் நம்மைப் பார்த்து, திமுக ஆட்சிக்கு வந்தால் பெரும்பான்மை மக்களுக்கும், இந்துக்களுக்கும், கோயில்களுக்கும் எதிரானவர்கள் என்று சொல்லுவார்கள். நான் கேட்கிறேன், வேறு எந்த ஆட்சியிலாவது 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறார்களா? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.
7,500 கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதா? இது கோயிலுக்கு எதிரானதா? கோயில்களை பாதுகாக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, நீங்கள் கோயில்களை பயன்படுத்தி மதக் கலவரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் உண்மையிலேயே மக்களின் நம்பிக்கையை மதிக்கக்கூடியவர்கள்; அதைப் பாதுகாக்கக்கூடியவர்கள். அது எந்த மதமாக இருந்தாலும், மக்களை பாதுகாக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
இந்த பகுதியில ஸ்ரீரங்கம் பகுதியில், ஸ்ரீரங்கம் பகுதியில் நகர்ப்புற பேருந்து நிலையம் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அந்தநல்லூர் மற்றும் மணிகண்டம் ஒன்றியங்களில் ஊரக குடியிருப்புத் திட்டத்தில் 119.22 கோடி ரூபாய் செலவீட்டில் குடிநீர் இணைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணுடையான்பட்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, மணப்பாறை ஒன்றியம் - பெரியப்பட்டி ஊராட்சியில் மாமுண்டி ஆற்றின் குறுக்கே ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வேத பாடசாலை, உணவருந்தும் இடம், மற்றும் தங்கும் விடுதி 5.66 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு காவிரி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் ரூ. 106 கோடி செலவீட்டில் கட்டப்பட்டு வருகிறது. சேதுராப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 8.5 கோடி மதிப்பீட்டில் 100 மாணவிகள் தங்கக்கூடிய அளவில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் அரசு கலைக் கல்லூரிக்கு 4.50 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சியில் 34.45 லட்சம் ரூபாய் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கொள்ளிட கரையில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது மற்றும் மணிகண்டம் ஒன்றியத்தில் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மணிகண்டம் ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறமாக கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அந்தநல்லூர் ஒன்றியத்தில் 5 கோடி ரூபாய் செலவில் அங்கன்வாடி தடுப்பு சுவர்கள் மற்றும் அரசு பள்ளி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இப்படி இத்தனை சாதனைகளையும் செய்து விட்டு தான் உங்களைச் சந்தித்து வாக்கு கேட்க வந்திருக்கிறோம். அது மட்டும் இல்லாமல், மறுபடியும் நம்முடைய ஆட்சி அமையும் போது முக்கிய திருத்தலங்களை இணைத்து சுற்றுலா வசதி மேம்படுத்தப்படும். திருச்சி, திருவரங்கம், மணச்சநல்லூர், சமயபுரம், கல்லணை, திருவெறும்பூர், புதுக்கோட்டை, மதுரை - சுற்றுச்சாலை அமைக்கப்படும்.
நகரின் முக்கியப் பகுதிகளில் வாகன நிறுத்த வசதிகள் மேம்படுத்தப்படும். தேவை இருக்கும் வழித்தடங்களில் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படும். தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும்.
இளைஞர்களுக்காக விளையாட்டரங்கம் நிறுவப்படும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு வசதி ஏற்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தொகுதி முழுவதும் பசுமை பரப்பளவு உயர்த்தப்படும். குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும். எல்லா அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் போர்டு வசதியோடு கூடிய பள்ளி அறைகள் உருவாக்கப்படும். மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் காலை உணவு திட்டம் எட்டாவது வகுப்பு வரை நீட்டித்துத் தரப்படும். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லா வகுப்பில் இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கும் காலை உணவு என்ற அந்த நிலை உருவாக்கித் தரப்படும்.
நம்ம மேல் ஹிந்தியை கொண்டு வந்து திணிக்கிறார்கள். ஹிந்தி படித்து என்ன பயன்? உத்தரப் பிரதேசத்துக்கு வேலைக்குப் போக முடியும். ஆனால் நம்ம வீட்டு பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகிறார்கள். நம்ம வீட்டு பிள்ளைகள் நல்ல எதிர்காலத்துடன் இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை தன் கையில் வைத்திருக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் இருமொழிக் கொள்கையை கையில் எடுத்திருக்கிறோம்.
நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலம் நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எத்தனையோ தொழில் முதலீடுகளை கொண்டு வந்து, இன்று தமிழ்நாட்டில் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வளர்ச்சி தொடர வேண்டும். தமிழ்நாட்டின் சுயமரியாதையை, மொழியை, அடையாளங்களை பாதுகாக்க வேண்டும்.
நமக்காகக் குரல் கொடுக்க, போராடக்கூடிய வேட்பாளருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் துரைராஜ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion


















