மேலும் அறிய

பயத்தால் பாஜக காலடியில் எடப்பாடி! – மதுரவாயலில் கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!

மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்: மதுரவாயல்–துறைமுகம் விரைவு சாலைத் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிறுத்தப்பட்டது: கனிமொழி கருணாநிதி எம்.பி.

சென்னை: மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் க. கணபதியை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி., முகப்பேர் மேற்கு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மத்திய பாஜக அரசின் பாரபட்சத்தையும், அதிமுகவின் இரட்டை வேடத்தையும் கடுமையாக விமர்சித்தார்.
 
 
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் க. கணபதியை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, முகப்பேர் மேற்கு மசூதி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
 
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., காரப்பாக்கம் கணபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் உதயசூரியன் சின்னத்திலே வாக்களிக்க வேண்டும் என்று உங்களை கேட்கும் பொழுது உரிமையோடு வந்து உதயசூரியன் சின்னத்திலே வாக்களிக்க வேண்டும் என்று கேட்கிறோம். 
 
காரப்பாக்கம் கணபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் முதலமைச்சர் நிறைவேற்றி வழங்கியுள்ளார் என்ற உரிமையுடன், உங்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆனால், நமக்கு எதிரணியில் இருப்பவர்கள் யார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும்வர்கள், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதையே அறியாதவர்கள். காழ்ப்புணர்ச்சியுடன் தேர்தலுக்கு தேர்தல் வந்து மக்களைச் சந்திக்கக்கூடியவர்கள்தான். 
 
டெல்லியிலிருந்து நம்மை எதிர்க்கவே வருகிறார்கள். இங்கே எடப்பாடி பழனிசாமி அவர்களோடு கைகோர்த்து கைகோத்துக்கொண்டு இதுவரைக்கும் பலமுறை சொல்லியிருக்காரு. “அவர்களோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று. ஆனால், தேர்தலுக்கு பிறகு அப்படியே சொல்லிவிடுவார்கள்; மறுபடியும் தேர்தல் வந்தவுடன் அவர்களோடு மேடையில் கைகோர்த்து நிர்கிறார். ஏனென்றால் பயம். தன்மேல ஏதாவது கேஸ் போட்டுற போறாங்க. வழக்கு வந்துச்சுன்னா என்ன பண்றது அப்படிங்கிற பயம். ஏன்னா பிஜேபி கிட்ட ஒரு நல்ல பழக்கம் இருக்கு. நீங்க எதிர்க்கட்சியில இருந்தீங்கன்னா கேஸ் போடுவாங்க. எதிரணியில இருந்தேனுன்னா வழக்கு போடுவாங்க. ஏனென்றால், தன்ன்மேல் ஏதாவது வழக்கு போடுவார்களோ என்ற பயம். வழக்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம். ஏனெனில், பாஜகவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தால் வழக்கு போடுவார்கள். 
 
யானைக்கவுனி மேம்பாலம், செங்கை சிவம் மேம்பாலம், மேயர் சிட்டிபாபு மேம்பாலம், போஜராஜன் நகர் இரயில்வே சுரங்கப்பாதை என வடசென்னையில் இத்தனை வேலைகள் நடைபெற்றிருக்கிறது. இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ‘முதல்வர் படைப்பகம்’ முதன்முதலில் சென்னையிலேயே தொடங்கப்பட்டது. அதுவும் நம்முடைய முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரில் தொடங்கப்பட்டது. திருவொற்றியூர், மாதாவரம், திரு.வி.க நகர் உள்ளிட்ட சென்னையின் பத்து சட்டமன்றத் தொகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் வடசென்னை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், எதிரணியில் இருப்பவர்கள் டெல்லியில் பட்ஜெட் தாக்கல் செய்தார்கள். பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, குறைந்தபட்சம் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவார்கள்; தமிழ்நாட்டையும் குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த முறை தேர்தல் இருப்பது தெரிந்திருந்தும், திருக்குறள் கூட குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாட்டின் பெயர்கூட சொல்லப்படவில்லை.
 
ரெயில்வே பட்ஜெட் நம்ம எத்தனையோ கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். ரெயில்வே பட்ஜெட்ல மஹாராஷ்டிராவுக்கு எவ்வளவு கொடுத்திருக்காங்க? இருபத்தி மூணா, கிட்டத்தட்ட இருபத்தி நாலாயிரம் கோடி மஹாராஷ்டிராவுக்கு கொடுத்திருக்காங்க. உத்தரப்பிரதேசத்துக்கு இருபதாயிரம் கோடிக்கும் மேல கொடுத்திருக்காங்க. குஜராத்துக்கு, ஏன்னா குஜராத்துக்கு தான் எல்லாமே போகும். டெல்லியிலிருந்து நேரா எல்லாமே குஜராத்துக்கு தான் போகும்.பதினேழாயிரம் கோடிக்கு மேல அவங்களுக்கு கொடுத்திருக்காங்க. தமிழ்நாட்டுக்கு ஏழாயிரம் கோடி, அதுவும், எத்தனை நாள் ஆகும் நிறைவேற்றத்துக்குன்னு நமக்கு தெரியாது பட்ஜெட்ல நம்ம பேரே இல்ல. 
 
ரெயில்வே பட்ஜெட்டில் நம்ம எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். ரெயில்வே பட்ஜெட்டில் மகாராஷ்டிராவுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்துள்ளனர்? கிட்டத்தட்ட 23 முதல் 24ஆயிரம் கோடி ரூபாய் மகாராஷ்டிராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு 20,000 கோடிக்கும் மேல் ஒதுக்கீடு செய்துள்ளனர். குஜராத்துக்கு 17,000 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெறும் 7,000 கோடி மட்டுமே. அதுவும், அது எப்போது நிறைவேறும் என்பது கூட நமக்கு தெரியவில்லை. 
 
“இந்தி படிக்க மாட்டோம்” என்று கூறியதற்காக நம்முடைய பிள்ளைகளுக்கு வர வேண்டிய நிதி கிட்டத்தட்ட 3,600 கோடிக்கு மேல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அடிக்கடி ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இங்கு வருகிறார். அடுத்த முறை இந்தப் பக்கம் வந்தால், அவர்களிடம் கேளுங்கள், அந்த 3,600 கோடியை முதலில் வழங்கிவிட்டு, பிறகு தமிழ்நாட்டுக்கு வரச் சொல்லுங்கள். 2016ஆம் ஆண்டு அதிமுக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின் 31வது பக்கத்தில், 27வது வாக்குறுதியாக இலவசமாக கைப்பேசி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் யாருக்கும் இலவச கைப்பேசி கொடுக்கவில்லை.
 
லேப்டாப் குடுக்கிறேன்னு ஆரம்பிச்சாங்க. நிறுத்துனது எடப்பாடி பழனிசாமி. அந்த லேப்டாப்பை மறுபடியும் தந்தது நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள். மீண்டும் தேர்தல் முடிந்தவுடன், நம்முடைய திராவிட மோடல் ஆட்சிக்கு வந்தவுடன் முப்பத்தியஞ்சு லட்சம் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, படிக்கக்கூடிய மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்கப்படும் ஐந்து ஆண்டுகளுக்குள் என்று அறிவித்திருக்கக்கூடிய முதலமைச்சர், நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள்.
 
லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்தியது எடப்பாடி பழனிசாமி. அந்த லேப்டாப் திட்டத்தை மீண்டும் தொடங்கி வழங்கியதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மீண்டும் தேர்தல் முடிந்தவுடன், திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன், 5 ஆண்டுகளுக்குள் 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அடுத்து கவர்னர் பதவிக்குத்தான் எடப்பாடி பழனிசாமி போக வேண்டும், இனிமேல் வேறு எந்தப் பதவிக்கும் அவருக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை.
 
வளசரவாக்கம் பகுதியில் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. நூற்று இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் காரம்பாக்கம் பகுதிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டு 152-இல் 27.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளசரவாக்கம் பகுதிக்கான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முகப்பேர் மேற்கு பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
 
இதையெல்லாம் செய்து தந்திருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அடுத்ததாக உருவாகும் நம்முடைய ஆட்சியில், இந்தத் தொகுதி மக்களுக்காக ஆயப்பாக்கம் பகுதியில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும். மதுரவாயல் தொகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படும். ஐடி பார்க் அமைக்கப்படும். மினி ஸ்டேடியம் உருவாக்கப்படும்.
 மேலும், மூடப்பட்ட ஜே.ஏ.கே. சிட்டி மால் வளாகம் கையகப்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் வர்த்தக மையமாக மாற்றப்படும். குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட மெட்ரோ வாட்டர் வழங்கப்படும். வெள்ளைநீர் வடிகால் அமைப்பு சீரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும்.
 
மதுரவாயல்–துறைமுகம் விரைவு சாலைத் திட்டம் 2009ஆம் ஆண்டு, அப்போதைய ஒன்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. 2011ஆம் ஆண்டு ஒன்றிய மற்றும் மாநில ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இது கலைஞர் தொடங்கிய திட்டம் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஜெயலலிதா தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை நிறுத்தியது. எந்தத் திட்டத்தை யார் நிறுத்தினாலும், மக்களுக்காக அதை நிறைவேற்றி தருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரின் கரத்தை பலப்படுத்த, மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Embed widget