மேலும் அறிய
Advertisement
Local Body Election | காங்கிரஸ் வேட்பாளருக்காக ஓட்டுக்கேட்க வந்த காந்தி, அம்பேத்கர், கருணாநிதி
குன்றத்தூரில் காந்தி, அம்பேத்கர் கருணாநிதி, வேடமிட்டு மேளதாளத்துடன் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்த 26 வார்டு காங்கிரஸ் வேட்பாளர் மெர்ஸி எஸ்தர் ராணி.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்றத்தூர் நகராட்சியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று குன்றத்தூர் நகராட்சி 26 ஆவது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மெர்ஸி எஸ்தர் ராணி ரவி ஆதரரித்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வப்பெருந்தகை தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | பொய் சொல்வதில் மு.க.ஸ்டாலின் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வர் - ஈபிஎஸ் பேச்சு
காந்தி, அம்பேத்கர் கருணாநிதி, வேடமிட்டு மேளதாளத்துடன் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரிப்பு pic.twitter.com/YtvCZjmkVq
— Kishore Ravi (@Kishoreamutha) February 14, 2022
தேர்தல் பிரசாரத்தில் காந்தி, அம்பேத்கர், கருணாநிதி, வேடமிட்டு மேளதாளத்துடன் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வீடு வீடாக சென்று 26 வது வார்டுக்கு உட்பட்ட மக்களை சந்தித்து கை சின்னத்திற்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மெர்ஸி எஸ்தர் ராணி வாக்கு சேகரித்தர். மேலும் இந்த பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்து, இதனை வெற்றி பெற்றதும் உடனடயாக செய்து தருவேன் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து வாக்குகளை சேகரித்தார். மேலும் தன்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வெற்றி பெற்றவுடன், பகுதியில் உள்ள அனைத்து குறைகளை நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதி அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion