மேலும் அறிய

டாஸ்மாக் பணமா? தேர்தல் பணமா? ரூ. 12.42 லட்சம் சிக்கியதால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு !

விழுப்புரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 12 லட்சத்து 42 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

விழுப்புரம்: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 12 லட்சத்து 42 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 12 லட்சத்து 42 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை விழுப்புரம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பணம் டாஸ்மாக் விற்பனைத் தொகை என ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

விழுப்புரம் அருகே உள்ள ராகவன்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனையிட்டனர்.

அப்போது காரின் உள்ளே கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் இருந்தவர்களிடம் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து அதிகாரிகள் கேட்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததுடன், அந்த இடத்தில் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர்.

பணத்துடன் பிடிபட்ட இருவரையும் அதிகாரிகள் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள் என்பதும், காரில் இருந்தது இரண்டு டாஸ்மாக் கடைகளில் அன்றைய தினம் வசூலான விற்பனைத் தொகை என்பதும் தெரியவந்தது.

"வழக்கமாக மதுபானக் கடைகளில் வசூலாகும் பணத்தை அன்றைய தினம் ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அடுத்த நாள் வங்கியில் செலுத்துவது வழக்கம். அதன்படியே இந்தப் பணத்தை எடுத்துச் சென்றோம்," என்று ஊழியர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பணத்தை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் ரூ. 12,42,260 இருந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், அந்தப் பணத்திற்கு இணையான விற்பனை ரசீதுகள் (Bills) முழுமையாக இல்லாததாலும், தேர்தல் விதிமுறைகளின்படி அதிகப்படியான பணத்தைக் கொண்டு செல்ல அனுமதி இல்லாததாலும், வட்டாட்சியர் யுவராஜ் முன்னிலையில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தப் பணம் உண்மையிலேயே டாஸ்மாக் நிறுவனத்திற்குச் சொந்தமானதுதானா அல்லது வேறு ஏதேனும் தேர்தல் பயன்பாட்டிற்காகக் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய ஆவணங்களை டாஸ்மாக் நிர்வாகம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் மட்டுமே பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget