மேலும் அறிய

UP Exit Poll Results 2024: உத்தர பிரதேசத்தில் அசைக்க முடியாத சக்தியாக மாறிய பாஜக.. கருத்துக்கணிப்பில் தகவல்!

UP Exit Poll Result 2024: ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் உத்தரப் பிரதேசத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில், அங்கு பாஜக பெரிய வெற்றியை பதிவு செய்தது.

பாஜகவின் கோட்டை உத்தரப் பிரதேசம்: கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 71 இடங்களை பாஜக கைப்பற்றியது. 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 62 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த மக்களவை தேர்தல் தற்போது நிறைவுபெற்ற நிலையில், பல்வேறு நிறுவனங்கள் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தில் 62 முதல் 66 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பிகார், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி தந்த கருத்துக்கணிப்பு: பிகாரில் 34 முதல் 38 தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் 11 முதல் 13 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, கர்நாடகாவில் 23 முதல் 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி  வெற்றுபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அடங்கிய இந்தியா கூட்டணி 15 முதல் 17 வெற்ற பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 3 முதல் 5 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் 1 முதல் 3 தொகுதிகளிலும் கர்நாடகாவில் 3 முதல் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் 7 முதல் 9 தொகுதிகளிலும் பாஜக 7 முதல் 9 தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் ஒரு தொகுதியில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, 353 முதல் 383 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மட்டும் 315 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையைவிட இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு கடும் போட்டி அளித்த இந்தியா கூட்டணி 152 முதல் 182 தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Exit Poll Results 2024 LIVE: பாஜகவா? இந்தியாவா? மக்களின் மனநிலை என்ன? கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது? உடனுக்குடன் அப்டேட்ஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget