மேலும் அறிய

ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !

வீரர்களுக்கான காப்பீடு (Insurance) தொகையை அரசாங்கமே ஏற்கும். காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். ​- ஈபிஎஸ் பேச்சு.

காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். - எடப்பாடி பழனிச்சாமி செக்கானூரணியில் பேச்சு.

ஈபிஎஸ் - பிரச்சாரம்
 
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை திண்டுக்கல்லில் தொடங்கிய அவரது பயணம், மாலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி, செக்காணூரணி பகுதிகளில் நடைபெற்றது.
 
கருணாநிதி குடும்பம் செழிக்க மட்டுமே திட்டங்களை தீட்டியவர்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்து செக்காணூரணியில் உரையாற்றிய அவர், அதிமுக மக்களுக்காகத் தொடங்கப்பட்ட கட்சி ஆனால் திமுக ஒரு குடும்பத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்களின் ஆசியோடு தான் இந்த இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், கருணாநிதி குடும்பம் செழிக்க மட்டுமே திட்டங்களை தீட்டியவர்.
 
வாகன மானியம் ரூ25,000
 
"மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படவுள்ள முக்கிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டார்: அனைத்து குடும்பங்களுக்கும் மகப்பேறு உதவித் தொகையாக ரூ.10,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, இலவச பிரிட்ஜ், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் ரூ25,000 மற்றும் ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள்.
 
பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்
தடையின்றி தரமான அரிசி, விலையில்லா பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வேரோடு அழிக்கப்படும். ​​ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ரூ.5 லட்சம் அரசு நிதியுதவி. போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு. வீரர்களுக்கான காப்பீடு (Insurance) தொகையை அரசாங்கமே ஏற்கும். காளைகள் பதிவு செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டு, பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். ​
 
210 இடங்களில் வெற்றி உறுதி
 
"210 இடங்களில் வெற்றி உறுதி" திமுக ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், "நமது கூட்டணி இயற்கையான மற்றும் வெற்றிக் கூட்டணி. நடைபெறவுள்ள தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்" என முழங்கினார். ​இறுதியாக, திருமங்கலம் வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரிய அவர், "பை-பை ஸ்டாலின்" எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
TN By-Election: திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
திருச்சி கிழக்கில் தேர்தல் பணிகளை தொடங்க அவசர உத்தரவு - தேதி எப்போது அறிவிப்பு? - சூடுபிடிக்கும் அரசியல் களம்
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
காங்கிரஸ் செய்தது தவறு; திமுகவை குறைத்து மதிப்பிடுவது அறியாமை : கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி !
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Puducherry CM Rangaswamy : புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி..! பதவி பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் கைலாசநாதன்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget