மேலும் அறிய

Edappadi Palanisamy : திமுக பிடியில் விசிக; சுதந்திரம் பறிபோனது! திருமாவளவனை முடக்கியது ஏன்? எடப்பாடியின் அதிரடி அட்டாக்!

திமுகவின் அழுத்ததின் காரணமாக திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட முடியவில்லை பின்வாங்கிவிட்டார்!

விழுப்புரம் : திமுகவின் அழுத்ததின் காரணமாக திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் போட்டியிட முடியவில்லை பின்வாங்கிவிட்டதாகவும், அந்த கூட்டணியில் உள்ள கட்சி சுயமாகவும் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியல என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். 
 
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆறு தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆறு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு மைலம் அதிமுக வேட்பாளர் சிவி சண்முகம் , திண்டிவனம் வேட்பாளர் அதிமுக அர்ஜீனன், வானூர் அதிமுக முருகன் விக்கிரவாண்டி பாமக சிவக்குமார் செஞ்சி பாமக கனேஷ்குமார் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
 
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி., தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கு டெல்லிக்கும் தான் பிரச்சனை என்கிறார். இங்கு நடப்பது சட்டமன்ற தேர்தல் இதற்கும் டெல்லிக்கும் என்ன சம்பந்தம் இருக்கு இதில் மக்களை திசை திருப்பி அரசியல் ஆதாயம் பார்க்க ஸ்டாலின் நினைப்பதாகவும் அதிமுக கூட்டணி வலிமையான கூட்டணி திமுக கூட்டணி அடிமை கூட்டணி என்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒரே கொள்கை என்கிறார். திமுகவிற்கு விசிகவிற்கும் ஒரே கொள்கையா, திமுகவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரே கொள்கையா என கேள்வி எழுப்பி மக்களை ஏமாற்றுகிற வேலையை முதல்வர் ஸ்டாலின் செய்வதாக தெரிவித்தார். 
 
புதுச்சேரியில் காங்கிரசும் திமுக ஒரே மாதிரியாக போட்டியிடுகிறீர்கள் கேரளாவில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் போட்டியிடுகிறார்கள் மாநிலத்திற்கு மாநிலம் கொள்கை வேறுபாடு உள்ள கூட்டணி கட்சி தான் திமுக என்றும் ஸ்டாலினுக்கு ரெண்டு நாள் தூக்கம்போச்சு அதற்கு காரணம் அ. ராசா அவர் வெளியிட்ட ஆடியோ தான் அந்த ஆடியோவில் சொல்கிறதை தான் நாங்களும் சொல்வதாகவும், அதில் கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை என வீட்டு சிறையில் அடைக்கபட்டிருந்ததாக ராசா தெரிவிக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவிக்கிறார். 
 
அதே போல் கருணாநிதி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக அ.ராசா கூறிய ஆடியோ குறித்து அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் விசாரணை செய்யபபடுமென கூறினார்.முத்துவேல் கருணாநிதி மகன் என ஸ்டாலின் கூறுகிறார். கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார். திருட்டு ரயில் ஏறி வந்த உனக்கே அவ்வளவு என்றால் விவசாய குடும்பத்தில் வந் எனக்கு என்ன இருக்கும் கருணாநிதி இருக்கும் வரை ஸ்டாலினை தலைவராக ஆக்கவில்லை அவர் அதிமுக குறித்து விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை, எந்த பயிர் என்று வித்தியாசம் தெரியாத மங்குனி முதலமைச்சர் தான் ஸ்டாலின் கரும்பு பயிர் நடுவே கான்கிரிட் ரோடு போட்டு பார்வையிட்ட மங்குனி முதல்வர் தான் ஸ்டாலின் நாட்டிலே கொள்கை அடிப்பது பாலியல் சீண்டலில் முதன்மை அரசாங்கமாக திமுக உள்ளதாக தெரிவித்தார். 
 
சர்க்கரை, பூச்சி மருந்து, கழிவறை பராமரிப்பு, டாஸ்மாக், மாநாகராட்சி , சொத்து வரி போன்றைவைகளில் ஊழல் படைத்த திமுக அரசு ஊழலுக்கே ஊற்றுக்கண்ணாக உள்ளதாகவும்,
ஊழல் நிறைந்த திமுக அரசு எங்களை விமர்சிக்க தகுதி இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். செம்மண் குவாரி வழக்கில் அரசு அதிகாரிகள் பிறழ் சாட்சியம் அளித்ததால் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த வழக்கு விசாரிக்கப்படும் தவறு இழைத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். கள்ளச்சாராத்திற்கு உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் கொடுத்தார்கள்,வைகோ ஒரு கட்சி துவங்கி நடத்தி வந்தவர் அவரது கட்சியை சார்ந்தவர்கள் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் அப்புறம் எதுக்கு கட்சி நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார். அழுது கொண்டே சிரிக்கிறேன் என திமுக கூட்டணியில் தெரிவிக்கிறார்கள், அப்படி இல்லை அதிமுக கூட்டணி இரண்டே மணி நேரத்தில் கூட்டணி குறித்து பேசி அறிவித்துள்ளேன்.
 
ஆனால் திமுகவும் காங்கிரசும் 20 நாட்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அந்த கூட்டணி மனபூர்வமாக அமைந்தது இல்லை,கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2021 ல் கொடுத்த இடத்தை விட ஒரு சீட் குறைவாக கொடுத்து இருக்கிறார்கள் தாங்கி பிடித்த விசிகவிற்கு கேட்ட இடங்களை கொடுக்காமல் திமுக செயல்பட்டுள்ளது. வெண்டிலேட்டரில் இருந்த தேமுதிகவிற்கு உயிர் கொடுத்தது அதிமுக ஆனால் அவர்கள் திமுகவுடன் இணைந்துள்ளார்கள் அங்க போய் தேவையான இடத்தை எடுத்து கொண்டதாக கூறினார்.
 
திமுகவின் அழுத்ததின் காரணமாக திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட முடியவில்லை பின்வாங்கிவிட்டார், அந்த கூட்டணியில் உள்ள கட்சி சுயமாகவும் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியல, அப்படி அடிமையாக இருக்கிற கட்சிகளுக்கு தேர்தலில் தெரியும், கஞ்சா போதை காரணமாக வெளியில் வெட்டப்படுகிறார்கள் பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் நடைபெறுவதாகவும், சிறுமிக்கு பாட்டிக்கு பெண்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூன்றே மாதத்தில் கஞ்சா அறவே ஒழிக்கப்படும் என கூறினார். 
 
 
தேர்தல் அறிக்கையில் அரசி காலி பணியிடங்கள் நிரப்படும் என தெரிவித்தார். ஆனால் பணியிடங்கள் நிரப்ப படவில்லை அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் அதனை நிறைவேற்றவில்லை தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் வீதியில் வந்து போராடினார்கள் தக்க பதிலடியை தேர்தலில் மக்கள் ஸ்டாலினுக்கு கொடுப்பார்கள் உதயநிதி கார்பந்தயம் நடத்துகிறார் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது இது தேவையா என்றும் அரசு பணத்தை வீணத்தடிவர்களின் ஆட்சி தேவையா என கேள்வி எழுபினார்.  கல்வி கடன் ரத்து செய்யவில்லை கேஸ் சிலிண்டருக்கு மான்யம் வழங்கவில்லை எதையும் செய்யாத திமுக அரசு மீண்டும் அறிக்கையாக அறிவிப்பினை வெளியிடுகிறார்கள்.
 
7.5 சதவிகித மருத்துவ கல்வி இடஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு அதிமுக பொறுப்பேற்றவுடன் அரசே கல்வி கட்டணத்தை செலுத்தும் அதிமுக அரசு என்றால் மக்களுடைய அரசு பொற்கால ஆட்சி, மக்களுக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தினை கொண்டு வந்ததை நிறுத்தியது திமுக அரசாங்கம் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விழுப்புரத்தில் அம்மா பல்கலைக்கழகம் அமைக்கப்படும். திமுக ஆட்சியில் இரண்டு வருடத்தில் 30 ஆயிரம் கோடிகள் கொள்ளையடிக்கபப்ட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள் வேளான்மை கூட்டுறவு வங்கில் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி இறுதியாக பேசி முடிக்கும் போது மழை குறுக்கிட்டதால் சில நிமிடங்கள் மழையும் பொறுட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
CV Shanmugam: சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்? இதுதான் காரணம்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Janaki Passed Away: இளையராஜாவின் முதல் பாடகி ஜானகி.. காற்றில் கரைந்த இசைஞானியின் நைட்டிங்கேல்!
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Embed widget