மேலும் அறிய

PAY’TM’ போல PAY’PM’… ஊழலைப் பற்றி பேச தகுதியே இல்லாத கட்சி பாஜக - அமைச்சர் பிடிஆர் கடும் விமர்சனம்

PTR on BJP: பங்களாதேசை விட பொருளாதாரம் மிகவும் சரிவாக கொண்டு சென்றுள்ளனர், மோசமான ஒரு பொருளாதாரத்தை கையாண்டுள்ளது பாஜக அரசு.

தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இண்டியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட தளவாய், அக்ரஹாரம், தாளமுத்து பிள்ளை சந்து, செல்லத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி .டி .ஆர். பழனிவேல் தியாகராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது :- இது சாதாரண தேர்தல் இல்லை, அஇஅதிமுக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதில் தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்கிறார்கள். சட்டமன்றத்திலேயே இது குறித்து, நான் இந்த உண்மையை சொல்லி இருக்கிறேன்.

கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது, அதை அவர்கள் வெளிப்படையாகவும் சொல்லவில்லை. அவர்கள் தாலியும் வாங்கவில்லை, தங்கமும் வாங்கவில்லை. நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை துவக்குவது என்பது முடியாத காரியம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தவர்களில் இருந்து தற்போது வரை அனைவருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது கடினமான காரியம்.

எனவே அதிமுக நிறுத்தி வைத்த திட்டத்தினை மீண்டும் எங்களால் துவக்க முடியாது என்ற காரணத்தினால், பெண் கல்விக்காக, அவர்கள் ஊக்கத்திற்காக, ஊக்கத்தொகையாக மாதம் 1000 ரூபாய் என்கிற புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தினோம். பெண்கள் கல்வி பெறுவதற்காகவே இத்தகைய மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தினோம்.

தாலிக்கு தங்கம் என்கிற திட்டத்தை விட சிறப்பான திட்டமாக புதுமைப்பெண் கல்வித் தொகை திட்டம் துவக்கப்பட்டது. இது சாதாரண தேர்தல் அல்ல, மிக முக்கியமாக நடக்க இருக்கின்ற தேர்தல். இந்தியாவில் ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜக அரசு மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

பங்களாதேசை விட பொருளாதாரம் மிகவும் சரிவாக கொண்டு சென்றுள்ளனர், மோசமான ஒரு பொருளாதாரத்தை கையாண்டுள்ளது பாஜக அரசு. அரைகுறையாக திட்டமிடல் இல்லாத ஜிஎஸ்டி வரி விதிப்பு, மேலும் ஊழலுக்கும், பாஜகவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிற இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால், அது பாஜக தான்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களால் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் இலாபமே இல்லாத பல கம்பெனிகள் பல நூறு கோடிகளை தானமாக பிஜேபிக்கு கொடுத்துள்ளார்கள். மேலும், யாரெல்லாம் ஐ.டி, இ.டி, சி.பி.ஐ மூலம் வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பேடிஎம் என்பது போல பே பிஎம் என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள்.

அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும். பே பி.எம். திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பாஜக அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற ஒரு நாடும், இந்திய சட்டமைப்பும் என்கிற மக்களாட்சி முறையும் நீடிக்காது.

நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பாரதிய ஜனதா கட்சிக்கு இவர்களது ஆட்சி நல்லதில்லை. பாரதிய ஜனதா கட்சி என்பதை மாற்றி, மோடி கட்சி என மாற்றி விடுவார்கள் எனக் கூறியிருக்கிறார், இவர்களது ஆட்சி நீடித்தால் எதிர்காலமே இருண்டு போய்விடும். நாட்டைக் காப்பாற்ற, மக்களாட்சியை காப்பாற்ற, இந்தியாவின் இதயத்தை காப்பாற்ற இண்டியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய வேண்டும், என்று கூறினார். 

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget